இந்தியா

இந்தியாவில் மாநிலங்கள் வாரியாக ஆட்சிமொழியும்

மொழிக் கொள்கை கொண்ட மாநிலங்களை காட்டும் வரைபடம் இது. தமிழ்நாட்டில் 1967ல் இருந்து இருமொழிக் கொள்கை என்ற நடைமுறை. 28 மாநிலங்களில், 8 யூனியன் பிரதேசங்களில் மொழிக் கொள்கைகள் எப்படி உள்ளன என்ற தெளிவான போக்கும் இல்லை. 22 மொழிகளை அரசியல் சாசன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 4276 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி பாடங்கள் இல்லாதது தான் 4900 மெட்ரிக்குலேஷன் […]

இலங்கைக்குக் கச்சத்தீவு தானம்

தமிழ்நாட்டுக் கடற்கரையிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ள கச்சத்தீவை, இலங்கைக்கு இந்தியா தானமாகக் கொடுத்தது. இதற்கான ஒப்பந்தத்தில், இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும், இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகாவும் 1974ம் ஆண்டு ஜூன் 28ந் தேதி கையெழுத்திட்டனர். இராமேஸ்வரம் அருகே தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையில் உள்ளது கச்சத்தீவு. இராமேசுவரத்தில் இருந்து ஏறத்தாழ 12 மைல் தூரத்தில் இருக்கிறது. முன்பு இந்தத் தீவு, இராமநாதபுரம் ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. ஆனால், இது தங்களுக்கே சொந்தம் என்று சில […]

ஆண்ட இனம் அழியலாமா?

ஈழத்தில் பூர்வ குடிகளாகத் திகழ்ந்த ஆண்ட தமிழினம் இன்று சிங்களப் பேரினவாதத்தால் அழிக்கப்படுகிறது. வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச் சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும், அதன் எச்சமாக தற்போது இலங்கைத் தீவு உள்ளது என்றும், எனவே இலங்கைத் தீவு தமிழ் மண்தான் என்றும் அறியப்படுகிறது. இலங்கையின் வரலாறு கி.மு.300இல் துவங்கியது என்று குறிப்பிடுகின்றனர். யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூல் அங்கிருந்த தமிழர்களின் சிறப்புகளையும், தமிழ் அரசர்களின் பெயர்களையும், அவர்கள் அந்தத் தீவை ஆண்டதைக் […]

அமெரிக்காவின் இராஜதந்திரம் இந்தியாவை விழுங்கப்பார்க்கிறது!

சமீபத்தில் அமெரிக்க அரசு துறையில் தெற்காசிய பிரச்சினைகளை கவனிக்கும் உதவி செயலாளர் செல்வி. ராபின் ராபேல் என்ற அம்மையார் கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தார். மரபு வழி வரவேற்புரைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இவருக்கு பெரிய வெளிநாட்டு அதிபருக்குத் தரும் வரவேற்புகளும், உபசரிப்புகளும் நடந்தன. இவர் இந்தியாவிற்கு எதிராக கடந்த காலங்களில் தவறான கருத்துகளையும் வாதங்களையும் வெளியிட்டவர். இதை இந்திய அரசு மறுத்தும் ஏற்றுக்கொள்ளாத அவருக்கு மாபெரும் வரவேற்புகளும் பாராட்டுகளும் டில்லியில் நடந்தன. டில்லி விமான நிலையத்தில் […]

அச்சுறுத்தும் சீன – இலங்கை உறவு

நாளுக்கு நாள் சீன – இலங்கை உறவு வலுப்படுகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. சீனாவின் அமைச்சர் அல்லது உயர் அதிகாரிகள் அடிக்கடி இலங்ககைக்கு வருகை தருகின்றனர். இலங்ககைக்கும் சீனாவுக்கும் இடையே பல உடன்பாடுகள் ஒப்பந்தங்கள் மாதா மாதம் கையெழுத்தாகிக் கொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, இந்து மகா சமுத்திரம், வங்கக் கடல், கச்சத்தீவு வரை சீனாவின் ஆதிக்கம் பரவிவிட்டிருக்கிறது. பாகிஸ்தானுடன் சீனா பல உடன்பாடுகள் கண்டு, குஜராத் வரை அரபிக் கடலில் சீனாவின் ஆதிக்கமும் ஆளுமையும் […]

நக்சலிசம் தேவைதானா?

கடந்த ஜூலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் 23 காவல் துறை அதிகாரிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். 23.6.2009இல் பீகார் மாநிலத்தில் லக்ஷஷராய் மாவட்டத்தில் நீதிமன்றத்திற்குள் புகுந்து தீவிரவாதிகளை விடுவித்துள்ளனர். 13.6.2009 அன்று பக்கோரா நகரத்துக்கு அருகில் 10 காவல் துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதே மாதத்தில் சாரண்டா காட்டில் மத்திய காவல் துறை ரிசர்வ் போலீஸ் அதிகாரிகள் 9 பேர் சுடப்பட்டு பலியானார்கள். ஒரிசா மாநிலத்தில் பாதுகாப்பு ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காமாண்டோக்கள் 38 பேர் சுடப்பட்டனர். ஒரிசா […]

Archives

Show Buttons
Hide Buttons