உச்சநீதிமன்றம்

கண்காணிப்பது மக்களின் கடமை

ஒவ்வொரு மாநிலத்திலும் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் என இரண்டு தேர்தல் திருவிழாக்களை காண்கின்றோம். தேர்ந்தெடுத்து செல்கின்ற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமைகளை ஆற்றுகிறார்களா என்று கண்காணிப்பது மக்களின்…

காவிரிப் பிரச்சினை: தமிழகம் செய்ய வேண்டியது என்ன?

இந்திய அரசியலில் காவிரிப் பிரச்சினை பெரும் சிக்கல் நிறைந்ததாகி விட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பெருமக்கள் சரியான நேரத்தில் சரியான பார்வையில் இந்தப் பிரச்சினையை அணுகாமல் இருந்ததுதான். 1924ஆம் ஆண்டில் இந்தப் பிரச்சினை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே எழுந்தது. இந்தப் பிரச்சினையில் முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என கடந்த காலங்களில் தில்லிக்கும், சென்னைக்கும், பெங்களூருக்கும் போவதும் வருவதுமாக இருந்தார்களே ஒழிய, இதில் வேறு எந்த முடிவும் யாரும் எடுக்கவில்லை. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் […]

இப்படிக்கு

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற பாரதியின் வாக்கு மெய்ப்படும் என்ற நிலையில், 150 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சேதுக்கால்வாய் திட்டம்; கமாண்டர் டெய்லர், டவுன்ஸ்டன், சர். வில்லியம் டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்டசன், சர் ஜான் கோடே, சர் ராபர்ட் போன்றவர்களின் தலைமையிலும், விடுதலைக்குப் பின் சர்.ஏ.இராமசாமி முதலியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நாகேந்திரசிங், வெங்கடேசுவரன், கோவில் பிள்ளை, லட்சுமி நாராயணன் போன்றோர் தலைமையில் பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் […]

ஒரு தூக்குக் கயிறு தூக்கிலிடப்பட்டது

மரண தண்டனை வேண்டுமா? வேண்டாமா? என்ற விவாதங்கள், ஹிட்லர் காலத்திலிருந்தே விவாதிக்கப்பட்டு நடக்கின்றன. வரலாற்றில் திருவிதாங்கூர் சமஸ்தானம்தான் தூக்குத் தண்டனையை ரத்து செய்தது. ஐ.நா. மன்றம் உலகளவில் தூக்குத் தண்டனை கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதன் காரணமாக, இன்றைக்கு பல நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. இப்பொழுதும் இதுகுறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்தியாவில் வீரபாண்டிய கட்டபொம்மன் பரங்கியரால் தூக்கிலிடப்பட்டார்; ஆனால் அவரது வாரிசான குருசாமி 27 ஆண்டுகளுக்கு முன் மூன்று முறை தூக்குக் கயிறு முனை வரை […]

நீதித் துறையில் சிலப் பிரச்சினைகள்

மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, அதன் விளைவாக வழக்குகளும், நீதிமன்றங்களிலும் வழக்குகளின் தேக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே, இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டும் மக்களுக்கு விரைவில் தீர்வுகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ஹேப்பியஸ் கார்பஸ் மனுக்கள் நடைமுளை சிக்கல்களினால் விரைவில் தீர்வு காண இயலவில்லை. குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் பலரின் வழக்குகள் தண்டனைக் காலம் முடிந்தவுடன் விசாரணைக்கு வருகின்ற அவலநிலை இருக்கிறது. சித்ராதேவி […]

நீதித் துறையில் தப்புத் தாளங்கள்

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் நீதிமன்ற ஊழியர்களின் பி.எப். பணத்தில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 26 நீதிபதிகளிடம் சி.பி.ஐ. இந்த ஊழல் சம்பந்தமாக விசாரிப்பது முதல் தடவையாகும். காசியாபாத் நீதிமன்றத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. எட்டு ஆண்டுகளாக தாங்களே கையெழுத்து போட்டு அனுமதி தந்துள்ளனர். இதில் பணம் மட்டும் இல்லாமல் விலை உயர்ந்த பொருள்களையும் நீதிபதிகள் கையூட்டாகப் பெற்றதாக தகவல்களும் உலவுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் […]

நீதிமன்றங்கள் செயலாற்றும் நடவடிக்கைகள்

நீதிமன்றங்களின் செயலாற்றும் நடவடிக்கைகள் பற்றி (Judicial Activism) 1996இல் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஜுடிசியல் ஆதடிவிசம் என்பதில் ஆக்டிவிசம் என்பதற்கு தமிழில் பொருள் என்ன என்று அறிய அகராதிகளைப் புரட்டும்பொழுது ஆக்டிவிசம் மனத்திட்பமே வினைத்திட்பம் என்ற ருடால்ஃப் யூகன் கோட்பாடாகும். தமிழில் இதற்கு நீதிமன்றங்களின் விறுவிறுப்பாக செயலாற்றும் முறை எனப் பொருள் கொள்ளலாம். தவறு செய்பவர்களை நீதிமன்றம் தண்டிக்கும் என்றும், நீதிமன்றத்தில் சமநீதி கிடைக்கும் என்பதற்கும் வரலாற்றில் பல சான்றுகள் இருக்கின்றன. பண்டைய இலக்கியத்தில் கண்ணகி நீதி கேட்டு […]

Archives

Show Buttons
Hide Buttons