எம்.ஜி.ஆர்.

சான்றோரை சிறப்பிக்க மேலவை

தமிழகத்தில் சட்ட மேலவை அமையும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகின்றது. ஒரு நடிகை மேலவைக்கு வரமுடியவில்லை; தனக்கு பிடிக்காதவர்கள், குறிப்பாக இன்றைய தமிழக முதல்வர் மேலவையில் இருக்கிறார் என்பதற்காக எம்.ஜி.ஆர். மேலவையை ஒழித்தார் என்று இன்றைக்கு வரை அவர்மீது விமர்சனங்கள் உண்டு. அதுமட்டுமல்லாமல் , 1986 கால கட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. பெரும்பான்மை பெற்றிருந்தது. அதன்மூலம் தி.மு.க.வின் பலம் மேலவையில் கூடிவிடும் என்ற எண்ணமும் எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்டது. பல எதிர்ப்புகள், கண்டனங்கள் […]

கோட்டை சட்டப்பேரவை சில நினைவுகள்

பதினோறாம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பரிவாரங்களின் அடையாளமாகத் திகழ்ந்த செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று வரை செயல்பட்டு வந்த தமிழக சட்டப்பேரவை மண்டபக் கூட்டம் இறுதிக்கு வந்துவிட்டது. ஓமந்தூர் ரெட்டியார் தோட்டத்தில் அமைய இருக்கும் புதிய சட்டமன்றத்தில் இனிமேல் சட்டப்பேரவை நடைபெற இருக்கிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை வளாகத்திற்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. 1640இல் கட்டப்பட்ட செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில், ராபர்ட் கிளைவினுடைய திருமணம் நடைபெற்ற புனித மேரி தேவாலயம் 1678இல் கட்டப்பட்டது. அந்த […]

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

ஒரு காலத்தில் இந்திய – இலங்கை மீனவர்கள் ஒருங்கிணைந்து வங்கக் கடலிலும் இந்திய பெருங்கடலிலும் மீன் பிடி தொழில் செய்தனர். 1742இல் பிங்கர்சால் என்ற டச்சு நிறுவனம் வகுத்த விதிகளின்படி கடல் எல்லை ஆளுமைகள் கட்டுப்பாடுகள் முறைபடுத்தப்பட்டன. கச்சத்தீவு அருகேதான் பெருமளவில் மீன்கள் கிடைக்கின்றன. நாகை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலட்சகணக்கான மீனவர்கள் அச்சமின்றி நாட்டுப்படகு, விசைப் படகுகளைக் கொண்டு தங்கள் தொழிலை நடத்தினர். 1976க்கு பின் அவசர நிலை […]

லத்திகா சரண் நியமனத்தில் உள்ள நியாயங்கள்!

திருமதி. லத்திகா சரண், காவல் துறை தலைமை இயக்குநராக (சட்டம் ஒழுங்கு) நியமிக்கப்பட்டது குறித்து திரு.பழ. நெடுமாறன், நடைமுறைக்கே வராத உச்சநீதிமன்றத்தின் நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், தி.மு.க. அரசு மற்ற காவல் துறை அதிகாரிகளை புறந்தள்ளிவிட்டு, திட்டமிட்டே லத்திகா சரணை நியமித்தது தவறு என்றும் சொல்லியுள்ளார். தவறான வாதங்களை எழுப்புவதற்கு முன் உண்மைகளை அறிந்து பேசுவது அனைவருக்கும் நல்லது. அதற்கு பதிலாக சில கருத்துகளை வைக்க விரும்புகின்றேன். திருமதி. லத்திகா சரண் நியமனத்திற்கு முன் இப்பொறுப்பிலிருந்த திரு. […]

வீண் குப்பையில் விளையும் வீண் செடி!

இன்றைய (18.11.2009) தினமணியில் பழ.நெடுமாறன் அவர்கள் முல்லைப் பெரியாறு, காவிரி, ஒக்கனேக்கல், ஈழத்தமிழர் பிரச்சினை போன்ற பல பிரச்சைனகளும் பாழ்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார். முல்லைப் பெரியாறைப் பொறுத்தவரை நெடுமாறன் அவர்கள் எம்.ஜி.ஆர். காலத்திலேயே சட்டமன்றத்தில் பேசியபோது, அன்றைய ஆட்சியாளர்கள் வாய்மூடி மவுனியாக இருந்ததை மறந்துவிட்டாரா?

கலைஞரின் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்ட பின் உலகத் தமிழர்கள் கூடும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோவையில் தலைவர் கலைஞர் நடத்த இருக்கின்றார். இம்மாநாடு கன்னித் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் பல பணிகளை மேற்கொள்ள உள்ளது. தமிழறிஞர்களின் ஆராய்ச்சி உரை வீச்சுகளும், முத்தமிழையும் கொண்டாடுகின்ற வகையில் இம்மாநாடு நடக்கும்.

வரலாறு தெரியாத ஜெயலலிதா

சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜனா ஜேக்கப் பேசும்பொழுது, முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு மதிய உணவு திட்டத்தை சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மட்டும்தான் காமராஜர் கொண்டு வந்தார் என்று மெத்த படித்த மேதாவியாக பேசியுள்ளார். காமராஜர் தலைமையிலிருந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், 50 ஆண்டுகளுக்கு முன்பு 27 ஆயிரம் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் நடைமுறையில் இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த கேர் (ஞிச்ணூஞு) என்ற நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் நடைபெற்றது. அந்த திட்டம் நடைமுறைக்கு […]

Archives

Show Buttons
Hide Buttons