காவிரி

நெறியற்ற நடவடிக்கைகள்…

பெருமழையால் கர்நாடகம் மறுத்தும், தஞ்சை டெல்டாவுக்கு தண்ணீர் வரத்து இருந்தது. இன்றைக்கு தண்ணீர் இருந்தும் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. நெல் சாகுபடியும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2014ல் ஹெக்டேருக்கு 8400 கிலோ நெல் கிடைத்தது.

காவிரிப் பிரச்சினை: தமிழகம் செய்ய வேண்டியது என்ன?

இந்திய அரசியலில் காவிரிப் பிரச்சினை பெரும் சிக்கல் நிறைந்ததாகி விட்டது. இதற்குக் காரணம், தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த பெருமக்கள் சரியான நேரத்தில் சரியான பார்வையில் இந்தப் பிரச்சினையை அணுகாமல் இருந்ததுதான். 1924ஆம் ஆண்டில் இந்தப் பிரச்சினை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலே எழுந்தது. இந்தப் பிரச்சினையில் முதல்வர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என கடந்த காலங்களில் தில்லிக்கும், சென்னைக்கும், பெங்களூருக்கும் போவதும் வருவதுமாக இருந்தார்களே ஒழிய, இதில் வேறு எந்த முடிவும் யாரும் எடுக்கவில்லை. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் […]

காவிரித் தாய்க்கு சோதனை!

ஜூன் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட், செப்டம்பர் தொடக்கம் வரை குற்றலாத்தில் சாரல் சீசன் தமிழர்களை மகிழ்விக்கும் காலமாகும். அதே ஜூன் இரண்டாவது வாரம் வந்துவிட்டாலே காவிரி டெல்டா மக்களுக்குக் காவிரியில் தண்ணீர் வராமல் திண்டாடும் சீசனும் தொடங்கிவிடும். இது முடிவில்லா சோகக் கதையாகத் தொடர்கிறது. இந்த ஆண்டும் மேட்டூர் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கவில்லை. டெல்டா மாவட்டத்தில் குறுவைப் பயிர் கேள்விக்குறியாகி விட்டது. மேட்டூர் அணையிலிருந்து கடந்த 78 ஆண்டுகளில் 15 தடவை மட்டுமே மேட்டூர் […]

காவிரி : பின்னணி

பூவார் சோலை மயிலாட புரிந்து குயில்கள் இசைபாட காமர்மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி.. வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவேரி, அகன்ற காவிரி என்று வணங்கப்பட்ட காவிரித் தாய்க்கு ஒரு நெடிய வரலாறு உண்டு. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தமிழகத்தில் காவிரி பகுதியில்தான் நீர் மேலாண்மை அமைந்து இருந்தது. கரிகாலச் சோழன் கல்லணை கட்டியது, இரண்டாவது ராஜராஜ சோழன் காவிரி நீரை தமிழகத்துக்கு மீட்டு வந்தது வரலாற்றுச் செய்தியாகும். 17ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட சிக்கதேவராயர் கட்டிய […]

அறியப்படாத தமிழக நதிநீர்ப் பிரச்சினைகள்

காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல், சிறுவாணி போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதை அறிவோம். ஆனால், இன்னும் அறியப்படாத பல தமிழக நதிநீர் தாவாக்கள் தமிழக மக்களின் கவனத்திற்கு வராமல் அரசின் கோப்பில் மட்டுமே பல ஆண்டுகளாக கேள்விக்குறியாக உள்ளன. அவைகளில் சில: கன்னியாகுமரி மாவட்டத்தில் 1963இல் திறக்கப்பட்ட நெய்யாறு அணையை கேரளம் மூடிவிட்டது. இதனால் விளவன்கோடு பகுதியில் 15 ஆயிரம் ஏக்கர் விவசாயம் கேரளத்தின் செயலால் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம், செங்கோட்டை […]

கங்கையும் – காவிரியும் குமரியைத் தொடுக!

“நீரின்றி அமையாது உலகு”; “சிறுதுளி பெரு வெள்ளம்”; “பார்க்கும் இடமெல்லாம் நீர்நிலை பருகத்தான் நீர் துளி இல்லை” என்று வழக்கத்தில் உள்ள மொழிகள் சொல்கின்றன. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என கிராமப்புறத்தில் சொல்வார்கள். தம்மை நாடி வந்தவர்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையென்றாலும், தண்ணீர் கொடுத்து உபசரிப்பது வாடிக்கையும், பெருந்தமையும் ஆகும்.

Archives

Show Buttons
Hide Buttons