தினமணி

இலங்கை தேர்தல், இனி என்ன?

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்து ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியை நான்காம் முறையாக பிரதமர் ராஜபக்சே அமைத்துள்ளார். இலங்கையில் 2 கோடியே 17 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடெனினும் இந்தியப் பெருங்கடல் புவியரசியலில் முக்கிய கேந்திரமாகவும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளடங்கிய புவியமைப்பாகும். இலங்கையில் 74.9% சிங்களர்கள் தமிழர்களுடைய மக்கள் தொகை படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11.2% ஆக உள்ளது. முஸ்லீம்கள் 9.7%, […]

நீதித் துறையில் சிலப் பிரச்சினைகள்

மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, அதன் விளைவாக வழக்குகளும், நீதிமன்றங்களிலும் வழக்குகளின் தேக்கமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. எனவே, இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டும் மக்களுக்கு விரைவில் தீர்வுகள் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் ஹேப்பியஸ் கார்பஸ் மனுக்கள் நடைமுளை சிக்கல்களினால் விரைவில் தீர்வு காண இயலவில்லை. குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் பலரின் வழக்குகள் தண்டனைக் காலம் முடிந்தவுடன் விசாரணைக்கு வருகின்ற அவலநிலை இருக்கிறது. சித்ராதேவி […]

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்

செய்தித் தாள்களிலும், ஊடகங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலச்சந்திரன் பற்றிய துயரச் செய்திகள் வெளியாகி கண்களைக் குளமாக்கி மனதை ரணமாக்கிவிட்டது. சிறுவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற ஐ.நா. மற்றும் மேலை நாடுகளின் கோரிக்கைக்கு இணங்க, அவர் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் நாள் காலை 7.30 மணி அளவில் ஐந்து மெய்க்காப்பாளர்களோடு சென்று ராணுவத்திடம் சரணடைந்துள்ளார். பாலகன் பாலச்சந்திரனுடன் சென்ற ஐந்து பாதுகாப்பாளர்களையும் தனித்தனியே சுட்டுக் கொன்ற இலங்கை ராணுவத்தின் 53ஆவது […]

நெருக்கடியில் நெய்யாறு

கேரள அரசு முல்லைப் பெரியாறு, ஆழியாறு, பரம்பிக்குளம், பாண்டியாறு, புள்ளம்புழா, அடவிநயினார், அச்சன்கோவில், பம்பை – வைப்பார் இணைப்பு என பல நதி நீர்ப் பிரச்சினைகளில் தொடர்ந்து சண்டித்தனம் செய்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளும், நியாயங்களும் மறுக்கப்படுகின்றன. இப்போது குமரி மாவட்டத்தின் நெய்யாறு பிரச்சினையிலும் கேரளம், தமிழகத்தின் உரிமைகளை மறுக்கக்கூடிய வகையில் நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்ககோடு பகுதியில் பாசனம் பெறக்கூடிய வகையில் 84.75 அடி கொண்ட நெய்யாறு அணை அமைக்கப்பட்டு அன்றைய கேரள முதலமைச்சர் […]

யாரை ஏமாற்றுகிறார் பிரதமர்?

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு இவற்றின் விலை அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில் அனைத்துத் தரப்பினரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனர். ‘சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஏற்ற வேண்டியுள்ளது’ என்று கீறல் விழுந்த ஒலித்தட்டைப் போல் திரும்பத் திரும்பப் பிரதமரும், நிதியமைச்சரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். விலை உயர்வை நியாயப்படுத்தி நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றிய உரையில் சர்வதேச மதிப்பில் கணக்கிட்டால் பெட்ரோல் ஒரு லிட்டர் […]

நெல்லை விடுதலை எழுச்சிக்கு நூற்றாண்டு

நெல்லைச் சீமையில் பூலித் தேவர், கட்டபொம்மன் காலத்திற்குப் பின்பு வ.உ.சி., பாரதி, வாஞ்சிநாதன், சிவா போன்ற ஆறுமைகள் விடுதலை வேள்வியில் இறங்கினர். விடுதலையே நமது குறிக்கோள்; அதனை எப்பாடு பட்டேனும் அடைந்தே தீரவேண்டும்; விடுதலையின்றி வாழ்வதைவிடச் சாவதே மேல்; ஆன்மா அழிவற்றது; பொது நலத்திற்காகவும் நாட்டின் விடுதலைக்காகவும் உயிர் துறப்பவனே நற்பேறு அடைவான் என்று கூறி மக்களைப் புகழ் மணக்கும் நெல்லையில் தட்டியெழுப்பிய வ.உ.சிதம்பரனார், வெள்ளையனை எதிர்க்க “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி” எனும் சுதேசிக் கப்பல் […]

மண்ணும் கடவுள்; மரமும் கடவுள்!

நாட்டுப்புற மக்களின் வாழ்வி என்பதே நம்பிக்கையின் அடிப்படையில்தான் அமைகிறது. அவர்களின் கடவுள் நம்பிக்கை அலாதியானது. கிராமத்து மக்கள் கடவுளைத் தேடி கோயில் கோயிலாக அலைவது இல்லை. தன் புஞ்சைக் கரையில் உள்ள ஒரு மரம் அவனுக்குக் கடவுளாகி விடுகிறது. கிராமத்து மக்களின் வழிபாடு என்பதே இயற்கை சார்ந்ததாக இருக்கிறது. மரம் இல்லாத ஒரு சிறு தெய்வக் கோயிலைக்கூட நம்மால் பார்க்க முடியாது. பெருந்தெய்வ மரபில் ஸ்தல விருட்சம் என்று இருப்பதைப் போல சிறு தெய்வ மரபிலும் மரங்கள் […]

பாழாகும் பாலாறு

பாலாற்றுப் பிரச்சினை இன்றைக்கு சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. பாலாற்றின் வரலாற்றை சற்றே திரும்பிப் பார்த்தால் பல செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. கர்நாடகத்தில் கோலார் மாவட்டத்தில் சிக்கல்லபூர் வட்டத்தில் பல மலைகள் உள்ளன. இதில் சென்ன கேசவ மலையின் வடபகுதியில் தோன்றும் ஆறு உத்தரப்பிநாகினி. தென் பகுதியில் தொன்றும் ஆறு தட்சிணப் பிநாகினி. இவைதான் தமிழில் வடபெண்ணையாறு, தென் பெண்ணையாறு எனச் சொல்லப்படுகிறது. இரண்டு ஆறுகளுக்கும் இடையில் பாலாறு தோன்றுகிறது. தற்போதைய பாலாற்றின் பயணம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும். காவிரிப்பாக்கம் […]

நீதித் துறையில் தப்புத் தாளங்கள்

சமீபத்தில் உத்திரப்பிரதேசத்தில் நீதிமன்ற ஊழியர்களின் பி.எப். பணத்தில் ரூ.7 கோடி மோசடி நடந்துள்ள வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய நீதிமன்ற வரலாற்றில் 26 நீதிபதிகளிடம் சி.பி.ஐ. இந்த ஊழல் சம்பந்தமாக விசாரிப்பது முதல் தடவையாகும். காசியாபாத் நீதிமன்றத்தில் இந்த மோசடி நடந்துள்ளது. எட்டு ஆண்டுகளாக தாங்களே கையெழுத்து போட்டு அனுமதி தந்துள்ளனர். இதில் பணம் மட்டும் இல்லாமல் விலை உயர்ந்த பொருள்களையும் நீதிபதிகள் கையூட்டாகப் பெற்றதாக தகவல்களும் உலவுகின்றன. இதில் சம்பந்தப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் […]

Archives

Show Buttons
Hide Buttons