ஓமாந்துரார் ஒரு வரலாறு
ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற காலகட்டம் அது. தமிழர் நலன்களுக்கு எதிரான அவருடைய நடவடிக்கைகளால், சில மாதங்களிலேயே அவருடைய ஆட்சி ஆட்டம்காணத் தொடங்கியது. வேறு ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேல்மட்டத் தலைவர்களால் முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் மூதறிஞர் ராஜாஜி. ஆனால், தமிழ்நாட்டில் இருந்த பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியை முதலமைச்சராக்குவதில் உடன்பாடில்லை. அந்தச் சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் எல்லா மட்டத்திலும் மாகாண முதலமைச்சர் […]