பிரம்மராஜன்
பிரம்மராஜன் நவீன தமிழ் இயக்கத்தின் முக்கிய புள்ளி. கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், மீட்சி சிற்றிதழின் ஆசிரியர். அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் பாங்குற அற்புத பணிகளை இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு செய்து வருகின்றார். லத்தீன் அமெரிக்க சிறுகதைகள், உலகக் கவிதைகள், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் போன்ற பல படைப்புகளை நமக்கு வழங்கியுள்ளார். இசையிலும் இவருக்கு நாட்டம் உண்டு. சேலத்தில் ஆச்சாரமான வைணவக் குடும்பத்தில் பிறந்து சைவத்தைப் போற்றி பொதுத் தளத்தில் அனைவரும் சமன்பாடான நலன்கள் பெற வேண்டுமென்ற கருத்தோட்டத்தைக் கொண்டவர். […]