Agriculture Lands Acquisition

தேனி விவசாயி இன்று தற்கொலை. நிலம் கையகப்படுத்தும் மசோதா (5) – Land Acquisition Bill (5)

மோடி அரசு எப்படியும் நிலம் கையகப்படுத்தும் மசோதாவைக் கொண்டு வந்தே தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறது. உச்சநீதிமன்றத்திலும் நான்கு விவசாய சங்கங்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு ஏன் அவசரச்சட்டம் என்று மக்களுக்குக் காரணம் சொல்லவேண்டுமென பொதுநல வழக்குகள் தொடுத்துள்ளன. மத்திய அரசோ, இது  விவசாயிகளுக்கு நன்மைகளும் சாதகமும் நிறைந்த  சட்டம் என்று பசப்பு வார்த்தைகள் சொன்னாலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் ஆதாயமடையவே விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்கவேண்டுமென்பது அதன் ஒரே குறிக்கோள். உச்ச நீதிமன்றமும் […]

நிலம் கையகப்படுத்தும் மசோதாவால் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயார் – வெங்கையா நாயுடு. பாவப்பட்ட மனிதனாக ஏழை விவசாயிகள் -6 . Land Bill, ready to face any consequences -Venkaiah Naidu. -6

நிலம் கையகப்படுத்தும்  அவசரச் சட்டத்தை முதலில் மத்திய அரசு பிறப்பித்த பொழுது, என்ன இவ்வளவு அவசரம் நாடாளுமன்றத்தில் விவாதித்து நடவடிக்கை எடுக்கலாமே என்று கண்டனங்கள் தெரிவித்தும், மோடி அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. இதுகுறித்த மசோதா நாடாளுமன்ற மக்களவையில் திடீரென அ.தி.மு.க ஆதரவோடு நிறைவேறியது. மாநிலங்கள் அவையில் இதுவரை சட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே சட்டமாக்காத நிலையில், முதலில் பிறப்பித்த அவசரச் சட்டத்தினுடைய காலவரை முடிவடைந்தது. அதன்பின்னும், வேண்டுமென்றே பல கண்டனங்களுக்கிடையே விவசாயிகளைக் காவு கொடுக்கும் வகையில் மறுபடியும் […]

விவசாயத்தை விட்டு வெளியேறுங்கள் – பொருளாதார நிபுணரின் திமிரான பேச்சு “Get out from Agriculture” highly condemnable speech. (விவசாயிகள் 5)

விவசாயத்தை விட்டொழித்தால் நாடுமுன்னேறும் என்று பொருளாதாரம் படித்த பிரகஸ்பதியின் பேச்சு.  – “Get out from Agriculture” It is a condemnable speech.  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில், சென்னை வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர், பொருளாதார நிபுணர்.  நீலகண்டன் என்பவர், “விவசாயம் ஒன்றும் உயிர்நாடி அல்ல; விவசாயத்தை விட்டு விவசாயிகளே  வெளியேருங்கள், அது தான் உங்களுக்கு நல்லது” என்று பேசியுள்ளார். இந்த செய்தி இன்றைக்கு (29-03-2015) நாளிதழ்களில் வந்துள்ளது. […]

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம் . — Land Acquisition.(4)

நிலம் கையகப்படுத்தும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வரும் 5ம் தேதியோடு காலக்கெடு முடிவடைகிறது. அதேவேளையில்  அவசரச் சட்டமும் காலாவதி ஆகின்றது. இப்படியான சூழ்நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை. கடந்த டிசம்பர் 31ம் தேதி நில கையக அவசரச் சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்தது. மக்களவையில் புதிய மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி உள்ளது. நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் 20ம் தேதிமுதல் துவங்குகின்றது. மாநிலங்கள் அவையில் இம்மசோதா நிறைவேறுமா என கேள்விக்குறி எழுந்துள்ள […]

நில கையகப்படுத்தும் மசோதா நிறைவேறியது -Land Acquisition Bill (2)

விவசாயிகளுக்கு எதிரான, நாடுமுழுவதும் பல கண்டனங்களுக்கு உள்ளான ”நிலம் கையகப்படுத்தும்  மசோதா” நேற்றைக்கு நாடாளுமன்ற மக்களவையில் ஒன்பது திருத்தங்களோடு நிறைவேற்றப்பட்டது. எதிர்கட்சிகள் ஐம்பதுக்கும் மேலான திருத்தங்கள் வழங்கியும், சிவசேனா போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்தும், அ.தி,மு.க ஆதரவோடு மோடி அரசு இம்மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆனால், மாநிலங்கள் அவையில்  இந்த மசோதாவினை நிறைவேற்ற மத்திய அரசு பல நெருக்கடிகளுக்கு உட்படும். 2011ல் மன்மோகன்சிங் ஆட்சிகாலத்திலே நிலம் கையகப்படுத்தும் மசோதா  கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய மசோதாவின் படி, நில உரிமையாளர்களுக்கு […]

அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். (1)

Agriculture Lands Acquisition … அப்பாவி விவசாயிகளை சவக்குழிக்குத் தள்ளும் மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம். _________________________________________________________________ விவசாயிகளை எந்த அரசாங்கம் வந்தாலும் வஞ்சித்து காவு வாங்குகிறது. தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள்  எண்ணிக்கை லட்சக்கணக்கிற்கும் மேலாகிவிட்டது. எவ்வளவோ விவசாயப் போராட்டங்கள். ஆனாலும் அவர்கள் வாழ்வில் விடியல் மட்டும் ஏற்படவில்லை.  சிவசேனை, அகாலிதளம், லோக் ஜன சக்தி, போன்ற தோழமை கட்சிகள் எதிர்த்தும் வம்படியாக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவருவதே குறியாக இருக்கிறது மத்தியில் […]

Archives

Show Buttons
Hide Buttons