kathai Solli

கதைசொல்லி – Kathaisolli

கதைசொல்லி இந்த காலாண்டுக்கான இதழ் அச்சாகி வந்துவிட்டது. நாளையிலிருந்து தபாலிலும், தூதஞ்சலி்லும் அனுப்பப்பட  இருக்கின்றது. கடந்த இதழ் கிடைக்கப் பெற்றவர்கள் பாராட்டியது மேலும் ஊக்கத்தை அளித்தது. கதைசொல்லியில் உள்ளடக்கம் மற்றும் அதன் கட்டமைப்புகள் பற்றி தங்களுடைய அன்பான கருத்துகளை எதிர்ப்பார்க்கின்றோம். அடுத்தவாரம் இறுதிக்குள் அனைவருக்கும் கதைசொல்லி இதழ் கிடைத்துவிடும் என நம்புகின்றேன். மின்னிதழிலும் கதைசொல்லியை 30-08-2015 அன்று மாலைமுதல் www.kathaisolli.in தளத்தில் வாசிக்கமுடியும். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். இணை-ஆசிரியர் – பதிப்பாசிரியர் கதைசொல்லி. பொதிகை-பொருநை-கரிசல். மின்னஞ்சல்  : rkkurunji@gmail.com #kathaisolli […]

கதை சொல்லி இதழ்-29

கதைசொல்லியின் 29-வது இதழின் பணிகள் முடிந்து அச்சுக்குச் செல்ல உள்ளது. இதழின் மெய்ப் பிரதியினை கி.ரா அவர்களுக்கு அனுப்பிவைத்தாயிற்று. மற்றொரு மெய்ப் பிரதியை கையில் எடுத்துக்கொண்டு, திருநெல்வேலி டவுண் சுடலைமாடன் தெருவில் உள்ள தி.க.சியின்  இல்லத்தின் முற்றம் வரை சென்றுவிட்டு கடந்தகாலங்களில் மூழ்கிவந்தேன்.  அவர் உயிரோடு இருந்தபொழுது கதைசொல்லியைக் கொண்டுவருவதில் அவர் காட்டிய ஆர்வமும், அக்கறையும், ஏனைய விவாதங்களும்  நினைவுக்கு வந்தது. அவரோடு அமர்ந்து பேசிய ஒரு பழைய இரும்பு நாற்காலி ஒன்று  அங்கு இருந்தது. அதில் […]

கதைசொல்லி வாசகர்வட்டம் – KSR Blog

அன்புக்குரிய முகநூல் நண்பர்களுக்கு… வணக்கம்,       தொடர்ந்து முகநூலில் தொடர்பில் உள்ள அன்பு நண்பர்களை அழைத்துப் பேச வேண்டுமென்று, தொடர்பில் உள்ள முகநூல் நண்பர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யவேண்டுமென்ற நண்பர்களின் விருப்பத்தின்படி திட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வில், “முகநூலும் பிரச்சனைகளும்- தீர்வும்” என்ற தலைப்பில் விவாதிக்க மூத்த பத்திரிகை ஆசிரியர்கள், இலக்கிய படைப்பாளிகள், கலையுலகத்தைச் சேர்ந்த நண்பர்களையும் அழைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான நாளும், அழைப்பிதழும் இறுதி செய்யும் பணி நடந்துமுடிந்ததும், […]

கதைசொல்லிக்கு தினமணி ஆசிரியர் திரு.கே.வைத்தியநாதன் அவர்களின் பாராட்டு.

இன்றைய தினமணி (24-05-2015)  தமிழ்மணியில், தினமணி ஆசிரியர் அன்புக்குரிய நண்பர் திரு.கே.வைத்தியநாதன் அவர்கள், “இந்தவாரம்- கலாரசிகன்” பத்தியில், சமீபத்தில் நாங்கள் கி.ரா அவர்களைப் புதுவையில் சந்தித்தது, அப்போது வட்டார மொழிகள் பற்றிய அவசியத்தை கி.ரா அவர்கள் குறிப்பிட்டது குறித்து சிறப்பாக எழுதியுள்ளார். அதே பத்தியில் கதைசொல்லியில் வெளிவந்துள்ள, எனக்கு உதவியாக இருக்கும் தம்பி கார்த்திக் புகழேந்தி அவர்களுடைய சிறுகதையான, “பண்டாரவிளை வைத்தியரும் காந்திமதி சித்தியும்”  கதையினை படித்துரசித்தது மட்டுமில்லாமல், தெக்குச் சீமையான திருநெல்வேலியின் மொழியையும், மாண்பையும், சிறப்பையும் […]

கதைசொல்லி – kathaisolli – கே.எஸ்.ஆர்.குறிப்புகள்.

கதைசொல்லி – Kathai Solli _____________________________________________________ திரு.முரளிதரன்  ( BBC ) Muralidharan Kasi Viswanathan​ அவர்கள், கதைசொல்லியில் வந்த ஏ.கே.ராமானுஜம் கவிதையைப் பற்றி எழுதியிருக்கும்  பதிவு.                                                      *********** கே.எஸ். ராதாகிருஷ்ணன் ‘கதைசொல்லி’யில்,சில குறிப்புகளை எழுதியிருந்தார். அதில் ஒன்று ஏ.கே. […]

கதை சொல்லி – KathaiSolli

கதை சொல்லி இதழ்  மற்றும் மின்னிதழ் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.மிக்கநன்றி.   பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் நண்பர்களும், குறிப்பாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் இதுகுறித்து ஆர்வம் செலுத்தியது மிகவும் பெருமைக்குரிய செயலாக இருந்தது.  1995லிருந்து ”கதைசொல்லி” வெளிவருகின்றது. இடையில் சிலகாலம் தொய்வு ஏற்பட்டுவிட்டது. கி.ரா மற்றும் என்னைப் போன்றவர்களுக்கு இது ஊமைக்காயமாகவே இருந்தது. இனிவரும் காலங்களில் தொடர்ந்து கதைசொல்லி வெளிவரும்.  வணக்கம். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். rkkurunji@gmail.com  08-04-2015.

கதைசொல்லி -Kathai Solli .

கதைசொல்லி மீண்டும் கொண்டு வந்திருப்பதில் உள்ளூர மகிழ்ச்சி நிறைய உண்டு. இடைப்பட்ட காலங்களில் பணிச்சுமைகளால் கதைசொல்லியை கொண்டுவர இயலாமல் போனதற்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். கதைசொல்லி வெளிவராமல் போனது பற்றி கி.ரா ஒருவார்த்தை கூட இதுவரைக்கும் என்னிடம் வாயெழுந்து சொல்லவில்லை. அவருக்கு வெளிச்சொல்லாத ஊமைக்காயம் போல வலியாக இருந்ததை உணரமுடிந்தது என்னால். தி.க.சி தன் கடேசி தருவாயில் அவருடைய ஈரமான கரங்களால்  என்னைப் பற்றிக் கொண்டு,  “ கதைசொல்லியை திரும்பவும் கொண்டு வந்துடுங்க […]

விமர்சன வித்தகரும், சிறியன சிந்தியா தி.க.சி. -Tee.Ka.cee

 நம்மிடம் வாழ்ந்த முக்கிய இலக்கிய கர்த்தாவாக இருந்த தி.க.சி அவர்கள் மறைந்து ஒராண்டு காலம் நிறைவு பெற்றுவிட்டது. பல எழுத்தாளர்களை தாமரை இதழ் மூலம் ஊக்குவித்தவர் தி.க.சிவசங்கரன். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடும் குணமுடையவர். பல நேரம் இதனால் தி.க.சிக்கும், ஜெயகாந்தன் அவர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. கி.ராவின் கதையே ”தாமரையில்” வெளியிட மறுத்த போது, நா.வானமாமலை, என்.டி.வானமாமலை போன்றோர் முன்னிலையில் பெரிய விவாதமே நடந்தது. நவீன இலக்கிய போக்கில் திறனாய்வு என்ற வாசலைத் திறந்து […]

கதை சொல்லி * இதழ்-27, Kathai solli

திட்டமிட்டவாறு ”கதை சொல்லி” -யின் பணிகள் நடக்கின்றன… அட்டைப்படம் மாட்டுவண்டியோடு இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.  கி.ராவுக்கு சந்தோஷம். கழனியூரன் உடல்நிலை சரியில்லை என்றாலும் கூட பொறுப்புகளை எடுத்துச் செய்தார். கோவில்பட்டி மாரீஸின் உழைப்பு அதிகம். படைப்பாளிகளின் படைப்புகள் பல வந்துள்ளன. யாவும் பரிசீலனையில் உள்ளன. முடிந்தவரை நாட்டுப்புற, வட்டார வழக்கு படைப்புகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த கதைசொல்லி இதழை நாங்கள் இருக்கின்றோம் என்று பொறுப்புகளைத் தலையில் ஏற்றிக்கொண்ட இளைஞர்களான,  கார்த்திக் புகழேந்தி (திருநெல்வேலி) , கனவுப்பிரியன் […]

கதைசொல்லி- Kathai Solli.

கதைசொல்லி பற்றிய விசாரிப்புகளும், வாழ்த்துகளும், இதழ்கள் எங்கே கிடைக்குமென்ற கேள்விகளும் , குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், தொலைப்பேசி அழைப்புகள் மூலம் தமிழகம் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலிருந்தும் ஈழத்தமிழர் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மத்தியிலிருந்தும் வந்திருந்தது.  ஒரே நாளில்  முகநூல் அறிவிப்பைப் பார்த்துவிட்டு நண்பர்கள்  அன்பர்களின் இந்த  அழைப்பும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியைத் தந்தது. பிஜி தீவுகளிலிருந்தும், தென் ஆப்ரிக்காவிலிருந்தும் முறையே சரவண நாயகம், படையாச்சி ஆகியோர் பேசியிருந்தார்கள். இருவருமே தூய தமிழ் பேசுகிறவர்கள்.  தமிழகத்திற்கு இவர்கள் வந்ததில்லை. இவர்களுக்கும் கதைசொல்லி மீதிருக்கும் ஈடுபாடும், […]

Archives

Show Buttons
Hide Buttons