kovilpatti

சங்கரன்கோவில்- கோவில்பட்டி களப்பணிகள்.

இன்று (02-08-2015) காலை சங்கரன்கோவில் அருள்மிகு.கோமதி அம்பாள் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தி.மு.க ஆட்சியில் அன்றைய அமைச்சர் மைதீன் கான், நாடாளுமன்ற உறுப்பினர் ச. தங்கவேலு அவர்கள் முயற்சியில், கழகப் பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களால் சங்கரன்கோவில் அரசு வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் திறப்பு விழா  நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிமுடிக்கப்பட்ட மாணவர்கள் விளையாடப் பயன்படுத்தும் விளையாட்டு அரங்கின் சுவர்களும், ஜன்னல்களும் இடிக்கப்பட்டு, சமூக விரோதிகளால் துவம்சம் செய்யப்பட்டிருந்தது. இதனைச் சரிசெய்ய வேண்டுமென்று சகோதரி […]

கி.ராவின் “மனுசங்க” கரிசல்மண் கோவில்பட்டி பற்றிய தி இந்து தொடருக்கு கடிதம். – Karisal- Kovilpatti- Kee.Ra

அன்புடையீர்,      வணக்கம்,  கதைசொல்லி ஆசிரியர் கி.ரா அவர்களின், “மனுசங்க…” என்ற தொடர்  தி இந்து தமிழ் ஏட்டில், செவ்வாய்க் கிழமை  மண்மணம் பத்தியில் தொடர்ந்து படித்துவருகிறேன். இன்றைய (02-06-2015) தொடரில் எங்கள் கரிசல் மண்ணின் கேந்திரநகரமான கோவில்பட்டி பற்றிய அடையாளங்களைச் சிறப்பாக சிலாகித்துள்ளார் கி.ரா. கதிரேசன் கோயில் பாதை, மூப்பனார் பேட்டை போன்றவையெல்லாம் கோவில்பட்டியின் அடையாளங்கள். இந்த மூப்பனார் பேட்டையில் தான் கிராமங்களிலிருந்து மாட்டுவண்டியில் விவசாய உற்பத்திப் பொருட்களை ஏற்றிக் கொண்டுவந்து சம்சாரிகள் வியாபாரிகளிடம் […]

அன்பார்ந்த கோவில்பட்டி அன்பர்களுக்கு – KOVILPATTI

தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ந்துவரும் கோவில்பட்டி நகருக்கு  மூன்று முக்கியப் பணிகளைச் செய்யவேண்டும் என்பது என்னுடைய நீண்டகால யோசனை.  அவை… 1. பேரறிஞர். அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை  1949 ல் செப்டம்பர் 18ம் நாள் மாலை நான்கு மணிக்கு, கொட்டும் மழையில் சென்னை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் துவங்கினார். அதன்பின்னர் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தை தலைவர்.கலைஞர் அவர்கள் அறுபத்துஐந்து  ஆண்டுகள் முன்னால்  கோவில்பட்டியில் துவங்கி வைத்தார்.  அடுத்த ஆண்டு 1950 ஆகஸ்டு 26,27 […]

விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த. திரு. சி.நாராயணசாமி நாயுடு – Statue_for_Agricultural_Movement_Leader

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த. திரு. சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் சிலையை கோவில்பட்டியில், லெட்சுமி ஆலை அருகில் அமைப்பதற்ககாக அரசின் அனுமதியை எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில், இதுகுறித்தான விபரங்களை அறியவும், வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்  தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் நண்பர்களிடமிருந்து  நித்தமும் செய்திகள் வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. சிலை அமைப்பது குறித்து அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள். -கே.எஸ்.இராதாகிருஷ்ணன். 12-05-2015.

விவசாயிகள் சங்கத் தலைவர்.நாராயணசாமி நாயுடு அவர்களுக்கு கோவில்பட்டியில் சிலை அமைப்புப் பணிகள் துவக்கம். – தமிழக விவசாயிகள் போராட்டம் நூல் வெளியீடு, Statue for Agricultural Movement Leader Narayanasamy Naidu at Kovilpatti. Book on Agricultural Movements in Tamil Nadu.

தமிழகத்தில் விவசாயிகளின் போராட்டம் 1930ல் துவங்கி நெல்லை மாவட்டம் கடம்பூர் அருகே, ஆங்கிலேயர் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு விவசாயியைச் சுட்டு அவர் மரணமடைந்தது வரலாற்றுச் செய்தி. விடுதலைப் போராட்ட காலத்தில் உத்தமர் காந்தியே வங்கத்தில் அவுரி விவசாயிகள் போராடிய போது, முன்னின்று அந்தப் போராட்டத்தை நடத்தியதும் வரலாறு. 1957லேயே ஆங்காங்கு விவசாயிகள் சிறுசிறு குழுக்களாகப் போராட்டங்கள் நடத்தினாலும், விவசாயிகள் சங்க ரீதியாக 1966ல் விவசாயிகள் சங்கம்  உருவெடுக்கப்பட்டது. அப்பொழுது நாராயணசாமி நாயுடு, கிருஷ்ணசாமி கவுண்டர், முத்துமல்ல […]

Archives

Show Buttons
Hide Buttons