Pamba Achankovil Vaippar link.

பம்பை-அச்சன்கோவில்- வைப்பாறு இணைப்பு- Pamba Achankovil Vaippar link.

கடந்த 24-07-2015 அன்று டெல்லியில் உள்ள சரம்சக்தி பவனில் அமைந்துள்ள, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு, “உச்சநீதிமன்றம் கடந்த 2012ல் எனது வழக்கில், நதிநீர் இணைப்பு குறித்து வழங்கிய தீர்ப்பின் மீது என்ன செயல்பாடுகள் நடந்துள்ளது” என்று அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளச் சென்றிருந்தேன். இந்த அமைச்சகத்தின் செயலாளர் ஸ்ரீசசி சேகரைச் சந்திக்கச் சென்றபோது அவருடைய அறையில் அவர் இல்லை. எனவே அவருக்கு அடுத்துள்ள அதிகாரிகளான, துணை மற்றும் இணைச் செயலாளர்களைச் சந்திக்கக்கூடிய சூழல்தான் அப்போது அமைந்தது. அந்த அதிகாரிகளிடம் […]

டெல்லியில் நடந்த நதிநீர் இணைப்புக்கூட்டம் – River Linking.

நேற்றைக்கு (13-07-2015)  நதி நீர் இணைப்பு குறித்து ஐந்தாவது கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது. உச்சநீதிமன்றம் 27-02-2012 அன்று அளித்த  எனது வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நடப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், ஆமை வேகத்தில் இந்த பிரச்சனை நகர்கிறது.  நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997) ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனது […]

கானல் நீராகும் அச்சன்கோவில் – பம்பை -வைப்பாறு இணைப்புத்திட்டம் – Pamba Achankovil Vaippar link.

இன்றைய (22-04-2015) தினமணி நாளிதழில் தலையங்கப்பக்கத்தில், தென் தமிழ்நாடு வளர்ச்சி பெற முக்கியமான நீராதாரத் திட்டங்களில் ஒன்றான கேரளாவில் உள்ள அச்சன் கோவில்-பம்பை தமிழகத்தின் வைப்பாறோடு இணைப்பதைக் குறித்து என்னுடைய கட்டுரை வெளிவந்துள்ளது. முழுக்கட்டுரை  தரவுகளோடு வலைதளத்தில் வாசிக்க இங்கு அழுத்தவும் .

நதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நதிநீர் பிரச்சனைகள் ஆர்வலர்களின் கவனத்திற்கு- River Linking Questions and Supreme Court Order.

மத்திய அரசு நேற்றைக்கு நதிநீர் இணைப்புத்திட்டத்தை விரைவு படுத்த பி.என். நவலவாலா தலைமையில் சிறப்புக்குழு ஒன்றைத் திருத்தி அமைத்துள்ளது. 1983லிருந்து நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, தேசிய நதிகளை இணைக்கவேண்டும் என்றும், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை  ஆகிய நீர்படுகைகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்கப்பட்டு கேரளாவில் மேற்குநோக்கிப்பாயும் நதிகளின் உபரிநீரைத் தமிழகத்திற்கு திருப்ப வேண்டும். இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, உதகை, ஈரோடு, கரூர் மாவட்டங்கள் மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு குடிநீர்வசதியும் கிடைக்கும் […]

பம்பை – அச்சன்கோவில் – வைப்பாறு இணைப்பு Pamba Achankovil Vaippar link.

கேரள சட்டமன்றக் கூட்டத்தில்,  06-03-2015 அன்று கேரள ஆளுனர் உரையில், பம்பை அச்சன்கோவில்-வைப்பார்-இணைப்பு செயல்படுவதற்கான  வாய்ப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளது. அந்த உரையில் கேரளா கோடைகாலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதர்காக வாமானபுரம், அச்சன்கோவில், மீனச்சில், சாலியாறு நதிகளின் குறுக்கே புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய அணையைக் கட்டுவதால், அச்சன் கோவில் ஆற்றின் தண்ணீர்வரத்து வரும் பகுதியில் தான் இந்த புதிய அணை கட்டப்படும். 1972லிருந்து மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட, தமிழகம் […]

Archives

Show Buttons
Hide Buttons