river linking Tamilnadu

நதிநீர் இணைப்பு

*கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும்* *கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின் (சாத்தூர்)வைப்பாறோடு இணைக்கவேண்டும்* உச்சநீதிமன்றத்தில் இந்திய நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி நெய்யாற்றோடு இணைக்க வேண்டும். கங்கை குமரியை தொடுவதோடு, கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரையும், அங்குள்ள அச்சன்கோவில்-பம்பை-தமிழகத்தின் வைப்பாறோடு இணைக்கவேண்டும் என்ற எனது வழக்கை 1983ல் தொடுத்து, 30 ஆண்டுகாலம் (2012 பிப்ரவரியில் தீர்ப்பு வந்தது)அதற்கெல்லாம் போராடியது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும். வழக்கின் மனுக்களில் குறிப்பிட்ட […]

தொய்வில் தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு இணைப்புத் திட்டம்.

திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட தாமிரபரணி –கருமேனியாறு – நம்பியாறு இணைப்பின் மூலம் 2.765டி.எம்.சி நீர், நான்குநேரி, திசையன்விளை, ராதாபுரம், சாத்தான்குளம், திருச்செந்தூர் பகுதிகளுக்கு பயன்படும் வகையில் திட்டமிடப்பட்டது. இதனால் 42,012.86ஏக்கர் புதிய பாசனப்பரப்பு உட்பட, 56,931.84ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும் கிடைக்கும். மேலும் இப்பகுதியில் குடிநீர் வசதியும், நிலத்தடி நீரும் உயர்வதால் ஏறக்குறைய 50கிராமங்களுக்குமேல் பயன்பெறும். இத்திட்டத்திற்காக 369கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான செலவீனம் மதிப்பீட்டுத் தொகையைவிட அதிகமாகும். மத்திய அரசு மற்றும் மாநில […]

டெல்லியில் நடந்த நதிநீர் இணைப்புக்கூட்டம் – River Linking.

நேற்றைக்கு (13-07-2015)  நதி நீர் இணைப்பு குறித்து ஐந்தாவது கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது. உச்சநீதிமன்றம் 27-02-2012 அன்று அளித்த  எனது வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் நடப்பது மகிழ்ச்சியைத் தந்தாலும், ஆமை வேகத்தில் இந்த பிரச்சனை நகர்கிறது.  நதிநீர் இணைப்பு வழக்கை குறித்து பிரதமராக இருந்த பி.வி.நரசிம்ம ராவ் (1992), தேவகவுடா (1996 இறுதி), ஐ.கே. குஜ்ரால் (1997) ஆகியோரை நான் நேரடியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசி பத்தொன்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனது […]

தமிழக நதிநீர் பிரச்சனைகளும், நதிநீர் இணைப்பு பற்றி சில புரிதல்கள் வேண்டும். நவலவாலா குழு. River Linking and Water resources issues of Tamil Nadu – BN Navalawala Task Force

தாமிரபரணி நதி தமிழகத்தின் நெல்லை மாவட்டம்  பொதிகை மலையில் உற்பத்தியாகி, 70மைல்தூரத்தில்  தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புன்னைக் காயலில்  வங்கக்கடலில் சேர்கின்றது. மற்ற நதிகளான காவிரி, வைகை, பாலாறு போன்றவற்றில் அண்டை மாநிலங்களை நம்பிதான் கடைமடைப் பகுதியான தமிழகம் நீர்ப்பாசனம் பெற வேண்டும். இந்த நதிகள் மீது தமிழகத்திற்கு உரிமைகள் இருந்தும் அவை அண்டை மாநிலங்களால் மறுக்கப்படுகின்றன. தெற்கே குமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றின் அணைக்கட்டு மூடப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. தமிழகத்தின் முதல்வரான பெருந்தலைவர் காமராஜரும், கேரள […]

நதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நதிநீர் பிரச்சனைகள் ஆர்வலர்களின் கவனத்திற்கு- River Linking Questions and Supreme Court Order.

மத்திய அரசு நேற்றைக்கு நதிநீர் இணைப்புத்திட்டத்தை விரைவு படுத்த பி.என். நவலவாலா தலைமையில் சிறப்புக்குழு ஒன்றைத் திருத்தி அமைத்துள்ளது. 1983லிருந்து நதிகள் தேசியமயமாக்கப்பட்டு, தேசிய நதிகளை இணைக்கவேண்டும் என்றும், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை  ஆகிய நீர்படுகைகளை தமிழக வைப்பாற்றோடு இணைக்கப்பட்டு கேரளாவில் மேற்குநோக்கிப்பாயும் நதிகளின் உபரிநீரைத் தமிழகத்திற்கு திருப்ப வேண்டும். இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, உதகை, ஈரோடு, கரூர் மாவட்டங்கள் மட்டுமில்லாமல் மற்ற மாவட்டங்களுக்கு குடிநீர்வசதியும் கிடைக்கும் […]

தமிழக நதிகள் இணைப்புத்திட்டம் – River linking in Tamil Nadu.

______________________________________________________ திமுக ஆட்சியில் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டு துவக்கப்பட்ட, தாமிரபரணி – கருமேனியாறு- நம்பியாறு இணைப்புத்திட்டம் நான்கு கட்டங்களாகச் செயல்படுத்த 369கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, பணிகளும் நடந்தவண்ணம் இருந்தன. திடீரென நான்குநேரிவரை நெருங்கிய இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு 5166 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது. இவையாவும் வெறும் அறிவிப்புகளாகவே உள்ளன. தமிழக அரசின் நேற்றைய பட்ஜெட் நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு வெறும் 253கோடி ரூபாய் […]

Archives

Show Buttons
Hide Buttons