சீனாவைக் கண்டு ஏன் அஞ்சுகிறது இந்தியா?
அருணாச்சல எல்லையில் சீனா கட்டிய 2ஆவது கிராமம்..
இந்திய பகுதியில் உள்ளதா?...

ஜனவரி 23 1977, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல் படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடிய, ஜெயப்பிரகாஷ் நாராயணன், கிருபாளானி போன்றவர்களால்ஜனதா கட்சி துவங்கப்பட்டது.
காங்கிரஸ் (ஓ)
பாரதிய லோக் தளம்
ஜனசங்கம்
பாரதிய கிராந்தி தளம்
சுதந்திரா கட்சி
சோசலிஸ்ட் கட்சி
பிரஜா சோசலிஸ்ட் கட்சி
சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி
உட்கல் காங்கிரஸ்
ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்
சந்திர சேகர்,
கிருஷ்ன காந்த்,
ராம் தான்,
மோகன் தாரியா,
சந்திரஜித் யாதவ்,
லட்சுமி காந்தம்மா போன்ற
இளம் துருக்கியர் என்றகாங்கிரஸ் (ஆர்) கிளர்ச்சியாளர்கள் இணைந்து ஜனதா கட்சி உருவானது.
மொரார்ஜி தேசாய் தலைவராகவும், சரண் சிங் துணைத் தலைவராகவும்,
மூன்று பொதுச் செயலாளர்கள். எல்.கே. அத்வானி (ஜனசங்கம்), சுரேந்திர மோகன் (சோசலிஸ்ட் கட்சி) மற்றும்
ராம் தான் (காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்). தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அசோக் மேத்தா, அடல் பிஹாரி வாஜ்பாய், பானு பிரதாப் சிங், பைரோன் சிங் ஷெகாவத், பிஜு பட்நாயக், சிபி குப்தா, சந்த் ராம், சந்திரசேகர், எச்.எம். படேல், கே.எஸ். தாக்கரே, மிருணாள் கோர், என். சஞ்சீவ ரெட்டி, நானாஜி தேஷ்முக், என்.ஜி. கோரே, பா. ராமச்சந்திரன், சமர் குஹா, சிக்கந்தர் பக்த், ஏ. ஸ்ரீதரன், பி.சி. சென், கர்பூரி தாக்கூர், முரளி மனோகர் ஜோஷி என 27 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, புதிய கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாக உருவாக்கப்பட்டது.மது தன்டவதே, ரபி ரே, இந்திராவை தோற்கடித்த ராஜநாரயணன், மதுலிமாயி என பலர்.
அகாலி தளம் பாதல், பர்னலா அமைச்சரவையில் இடம் பெற்றனர். கட்சியின் பொருளாளராக சாந்தி பூஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா கட்சி இந்தியா சுதந்திரத்திற்கு பின்
30 வருடங்களாக ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை முதன் முதலில் தோற்கடித்து... மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை non congress government நிறுவியது.
தமிழகத்தில் திமுக கூட்டணி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது.
ஜனதா கட்சி

இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா, “ நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும்.
சுபாஷ் சந்திரபோஸின் இறுதி உரை

செய்தி-மக்கள் துறை நேதாஜி போஸ் 125ஆவது பிறந்தநாளை 126 என்று செய்தித்தாள்களுக்கு, தினசரிகளுக்கு தவறாக விளம்பரம் கொடுத்துள்ளது. இதேபோலவே பாரதி பிறந்த நாளும் கடந்த டிசம்பர் 11ம் தேதி தவறாக குறிப்பிட்டு இருந்தது. இதில் கவனம் முக்கியம். ஏன் இவ்வளவு பிழைகள் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பார்வைக்கு.
செய்தி-மக்கள் துறை நேதாஜி போஸ் 125ஆவது பிறந்தநாளை 126 என்று செய்தித்தாள்களுக்கு, தினசரிகளுக்கு தவறாக விளம்பரம் கொடுத்துள்ளது. இதேபோலவே பாரதி பிறந்த நாளும் கடந்த டிசம்பர் 11ம் தேதி தவறாக குறிப்பிட்டு இருந்தது. இதில் கவனம் முக்கியம். ஏன் இவ்வளவு பிழைகள் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
மக்கள் மறந்த மகத்தான தலைவர் நேர்மையின் முகவரி ஒமந்தூர் இராமசாமி ரெட்டியார், அவர்கள் பிறந்த நாள் இன்று
இவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார்.
சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர்.
இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது.
அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார்.
ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார்
நேர்மையின் முகவரி ஒமந்தூர் இராமசாமி ரெட்டியார்

மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23-ஐ, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை,பிப்ரவரி 1ம் தேதி அன்று காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யவுள்ளார்.
நிதிநிலை அறிக்கையின் இறுதி கட்ட நடவடிக்கையை குறிக்கும் வகையில், இதன் தயாரிப்பில் ஈடுபட்ட நிதியமைச்சக ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. வழக்கமாக இந்தப் பணி அல்வா தயாரிப்புடன் நடைபெறும். இந்தாண்டு பெருந்தொற்று சூழலை கருத்தில் கொண்டு, சுகாதார பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதற்காக அல்வா தயாரிக்கும் விழாவுக்கு பதிலாக இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிதிநிலை அறிக்கை ரகசியத்தை பராமரிக்க, நிதிநிலை அறிக்கை தயாரிப்பில் ஈடுபட்ட அதிகாரிகள், நிதி நிலை அறிக்கை வெளியாகும் வரை, பட்ஜெட் பிரஸ் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்திலேயே தங்கியிருப்பர். நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த பின்பே, இந்த அதிகாரிகள் தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வர்.
மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22, முதல் முறையாக காகிதம் இல்லா முறையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதிநிலை அறிக்கை குறித்த செயலியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுக்காக வெளியிடப்பட்டது. அதேபோலவே, 2022-23 மத்திய நிதிநிலை அறிக்கையும், நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பின்பு கைப்பேசி செயலியில் கிடைக்கும்.
இந்த கைப்பேசி செயலியில், பட்ஜெட் உரை, ஆண்டு நிதிநிலை அறிக்கை, மானிய கோரிக்கைகள், நிதி மசோதா என 14 விதமான ஆவணங்களை முழுமையாக பார்வையிடலாம். ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் இந்த செயலி ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் கிடைக்கும்.
இதுவரை இந்திய பட்ஜெட் வரலாற்றில் நீண்ட நேரம் உரையாற்றியவர், நிர்மலா சீதாராமன் 1-2-2020ல் 2 மணி நேரம் 42 நிமிடங்கள். அதற்கு முந்திய ஆண்டு 2 மணி 17 நிமிடம் பேசி படைத்த பட்ஜெட்யை அவரே முறியடித்தார்!
இந்தியாவின் முதல் பட்ஜெட்டை 75 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தை சேர்ந்த, நீதிக் கட்சியில் இருந்த, கோவை ஆர்.கே.எஸ்.சண்முகம் செட்டியார் தாக்கல் செய்தார், நேரு பிரதமராக இருந்தபொழுது. எத்தனையோ மாற்றங்கள் பட்ஜெட்டுகளில்.
அன்றைக்கு நேரு அவர்கள், ரஷ்யாவில் திட்டங்களின்படி ஐந்தாண்டு திட்டத்தை இந்தியாவில் செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார். திட்டக்குழு இருந்தது. இன்றைக்கு நிதி ஆயுக் என்று அது மாறிவிட்டது.
ஒரு நீண்ட தொடர் பயணமாக இந்திய பட்ஜெட்டுடைய பரிணாமங்கள், வளர்ச்சியும், நிறைகளும், குறைகளும் அடங்கிய வண்ணமே உள்ளன. மாநில அதிகாரங்களும் சில நேரங்களில் இந்த பட்ஜெட் தாக்கலின்போது பாதிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியாவின் 25வது ஆண்டு பட்ஜெட்டை ஒய்.பி.சவான் நிதியமைச்சராக இருந்து தாக்கல் செய்தார். அதேபோல ப.சிதம்பரம் 50வது ஆண்டில் தாக்கல் செய்தார். இப்போது 75 வது ஆண்டில் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கின்றார். அன்றைக்கு சண்முகம் செட்டியார் பட்ஜெட் தாக்கல் செய்ய இருந்த போது, பல மாதிரியான நெருக்கடியான சூழ்நிலைகள், இந்தியா முன்னேற வேண்டும், பிரிட்டிஷார் விட்டுச் சென்ற நிலையில், நாட்டில் உள்ள வருவாய்களை கூட்டி, மேலும் வளப்படுத்தி, நாட்டுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய பணிகள் அன்றைக்கு இருந்தது.
நேரு நம் நாட்டை தொழில் மயமாக்க வேண்டுமென விரும்பி பல்வேறு முனைப்புகளை காட்டிய வகையில், அவருடைய காலம், அதாவது நேரு- சாஸ்திரி காலம் வரை அது ஒரே போக்கில் பட்ஜெட் சென்றது. பிறகு இந்திரா காந்தி பிரதரமாக வந்தபிறகு ஒரு சில மாற்றங்கள் வந்தன. கல்வி முறைகளில் மாற்றம் வரவேண்டும், அதே போல பசுமைப்புரட்சி என்று சி.சுப்பிரமணியம் காலத்தில் விவசாயத்தில் கொண்டு வந்து, நம்முடைய தற்சார்பு விவசாயம் அழிந்து, பாரம்பரிய விவசாயம் அழிந்து அதில் பல சிக்கல்களும் வந்தன. அன்றைக்கு இந்தியாவில் உணவுப் பஞ்சம் வேறு இருந்தது. ஒரு கட்டத்தில் அனைவருக்கும் உணவு, உடை, வீடு என்ற கோஷத்தை இந்திராகாந்தி முன்னெடுத்தார்.
ஒரு பக்கத்தில் சோஷலிஸ்டுகளாக இருந்த ஜெயபிரகாஷ் நாராயணன், லோகியோ போன்றவர்களெல்லாம் சோஷலிஸ்ட் முறைகள் நடைமுறைக்கு வரவேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அதேபோல கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்முனையில் இருந்து தங்கள் கடமைகளை ஆற்றினர்.
இந்த காலகட்டத்தில் 1967ல் திராவிட இயக்கம் தமிழகத்தில் வலுப்பெற்று திமுக ஆட்சியை கைப்பற்றியது. மாநில சுயாட்சி என்ற குரலும், அண்ணாவின் கொள்கையை தலைவர் கலைஞர் முன் நிறுத்தி குரல் கொடுத்தார். இதற்கும் பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கக் கூடாது. நிதி ஆதாரங்களை, அதன் சம்பந்தமான தொகுப்புகளை சரிசமமாகப் மாநிலங்களுக்கு பங்கிட வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் இருந்தது.
அதன்பின் எத்தனையோ மாற்றங்கள், இந்திராகாந்தி மறைவு, ராஜீவ் காந்தி ஆட்சிக்கு வந்து தொழில்நுட்பத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அதற்கான முன்னெடுப்பு திட்டங்கள் நிதி அறிக்கையில் இருந்தன. ராஜீவ் காந்திக்கு பிறகு வி.பி.சிங், அவர் காலத்தில் நிதி அறிக்கையில் பெரிதாக ஒன்றுமில்லை, அதுவும் ஓராண்டு தான் தாக்கல் செய்யப்பட்டது.
நரசிம்மராவ் காலத்தில் மன்மோகன் சிங் நிதியமைச்சர். நெருக்கடியான கட்டம். சந்திரசேகர் காலத்தில் நம்மிடமிருந்த தங்கத்தை வெளியே அடகு வைத்தோம். அதை மீட்டோமா, இல்லையா என்று தெரியவில்லை. பிறகு நரசிம்மராவ் காலகட்டத்தில், பொருளாதார ரீதியாக ஒரு முக்கியமான காலகட்டம். அன்றைக்கு புதிய பொருளாதாரக் கொள்கையும்,டங்கல் திட்டத்தின்படி தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற நிலைக்கு இந்தியா வந்தது. அதற்குப்பிறகு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளில் மாற்றங்கள் எழுந்தன.
அதற்குப் பிறகு தேவகவுடா, குஜரால் காலங்களில் சிதம்பரம் 50ம் ஆண்டு நிதி அறிக்கையை தாக்கல் செய்தார். மராட்டியத்தை சேர்ந்த ஒய்.பி.சவான் 25வது ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். மூத்த அமைச்சர், காங்கிரஸின் மூத்த தலைவர். அப்போது தேவகவுடா, குஜரால் பிரதமராக இருந்தபோது ஒரு நிலையற்ற அரசாங்கம் அமைந்தது. கூட்டணி சேர்ந்து அன்றைக்கு மத்தியிலே ஒரு ஆட்சி அமைந்தது, ஒன்றரை இரண்டு ஆண்டுகள் கடந்தன.
அதன்பிறகு, அந்த ஆட்சிக்குப்பின் வாஜ்பாய் பிரதமர் ஆகி ஐந்து ஆண்டுகள் இருந்தார். யஷ்வந்த் சின்கா, ஜஸ்வந்த் சிங் போன்றவர்கள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது தான், தமிழகத்தில் சேதுக்கால்வாய் திட்டத்தை அறிவித்தார்கள். அப்போதும் நரசிம்மராவினுடைய கொள்கையின் தாக்கங்கள் அடிப்படையில் தான் நிதிநிலை அறிக்கைகள் இருந்தன.
பிறகு மன்மோகன் சிங் பிரதமர். இந்த காலகட்டத்தில் சிதம்பரம், பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்கள். மன்மோகன் சிங் உடைய ஒரு பொருளாதார பார்வையில், அவருடைய பரிந்துரையில் 2004 லிருந்து 2014 வரை உலகமயமாக்கல் என்ற நிலையில், அன்றைய பட்ஜெட்டுக்குள் அமைந்தன. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் இன்றைக்கு நிர்மலா சீதாராமன் உடைய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தாலும், சில குறைகளும் நிறைகளும் உண்டு.
இன்றைக்கு 75வது ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இன்றைக்கு பட்ஜெட் தாள்களாலான ஆவணங்கள் இல்லாமல், அனைத்தும் இணையம் வழியாக தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டுக்கு முன்னால் பல தரப்பினருடன் விவாதங்கள் நடத்தி, ஆலோசனைகள் பெற்று என்னென்ன, எம்மாதிரியான பட்ஜெட் தயாரிக்கலாம், தொழில்துறையில் விவசாயத்தில், கல்வித்துறையில், மருத்துவத்துறையில் என்று, ஒரு மாதம் இரண்டு மாத காலம் பல்வேறு தரப்பு தொழிற்சங்கவாதிகளுடன் ஆலோசனை நடத்தி தாக்கல் செய்வது ஒரு வாடிக்கை. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னால் அந்த பட்ஜெட் ஆவணத்தை மிகவும் ரகசியமாக, யாருக்கும் தெரியாமல், மூடிய பெரிய அச்சகத்திலிருந்து அடித்து, அவர்களை வெளியே விடாமல், தாக்கல் செய்த பின்புதான் அந்தப் பணியாளர்கள் வெளியே வருவார்கள். அதுதான் மரபு. அதுபோல அந்த பணியில் இறுக்கம் இருந்த காரணத்தினால், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் இனிப்பு கொடுப்பது வழக்கம். அதாவது அல்வா மாதிரி தயாரித்து நிதி அமைச்சர் முன்னிலையில் அவர்களுக்கு வழங்குவது போல எல்லாம் நடப்பது வழக்கம். இது எப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் பற்றி நான் கடந்த காலத்தில் எழுதிய விரிவான பதிவுகளும் உள்ளன. பட்ஜெட்டும், நம்முடைய அரசியல் அமைப்பு சட்டமும் தான் நம்மை வழிநடத்துகின்றன. அது முக்கியமான விடயமும் கூட. பட்ஜெட்டை பொறுத்தவரை, மத்திய பட்ஜெட் பிரதானமானது. அதைப் பொறுத்து பல்வேறு திட்டங்கள் மாநில வாரியாக பெறக்கூடிய திட்டங்கள் எல்லாம் அதில் குறிப்பிடப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும், சட்டமன்றங்களில் அந்த மாநில நிதி அமைச்சர்கள், நிதி அறிக்கையை தாக்கல் செய்வார்கள். அந்த மாநிலத்தில் இருக்கும் வருவாயைப் பொறுத்து, அங்கே கிடைக்கின்ற வருவாயைப் பொறுத்து, மத்திய தொகுப்பிலிருந்து எவ்வளவு நிதி வருகிறது, இது குறித்தான பல்வேறு குழுக்கள் மத்திய அரசால் நியமிக்கப்படுகிறது. அந்தக் குழுக்களுடைய பட்டியல் ஒரு நீண்ட பட்டியலாகும். இப்படியான முறையில் மத்திய அரசினுடைய நிதிநிலை அறிக்கை என்பது ஒரு பிரதானமான விடயமாகும்.
மத்திய அரசினுடைய நிதி அறிக்கையில், என்ன வருகின்றது என்று எதிர்பார்ப்போடு நிதி நிலை தாக்கல் செய்யும் நிலையில், பல தரப்பினரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். நிதிநிலை அறிக்கை பல காலங்களில் பிப்ரவரி 28ஆம் தேதி மாலைப்பொழுதில் தாக்கல் செய்வது வாடிக்கை. தற்போது சில ஆண்டுகளாக அதை காலையிலேயே தாக்கல் செய்யக் கூடிய நிலையில் மாற்றப்பட்டுள்ளது. இன்றைய நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று நோய் பாதிப்பின் காரணமாக, பல்வேறு சூழலில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். கடந்த 2021-22 நிதி அறிக்கை தாக்கல் செய்யும் பொழுது, தொற்று நோய் குறித்தான வகையில், என்ன செய்யலாம், அதை கடந்து முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், 2021-22 இல் காணப்பட்ட ஜிடிபியில் 9.5 புள்ளி நிதி பற்றாக்குறையை அடுத்த 5 ஆண்டுகளில் ஜிடிபி ஐ 4.5 புள்ளியாக கொண்டு வருவதென்பது என்று ஒரு இலக்கை அன்றைக்கு அறிவித்தார்.
15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டது. நிதியமைச்சர் எதிர்பார்த்ததை போல நிகழாண்டில் வருவாய் பற்றாக்குறையை ஜிடிபி ஐ 6.8 என்ற வரையறைக்குள் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் ஜிடிபி வளர்ச்சி பட்ஜெட் இலக்கை விட அதிகமாக இருக்கும் என்று நினைக்கக் கூடிய அளவில், சூழல் அமைந்தது. மத்திய அரசின் வரி வருவாய் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம். நிகழாண்டில் மாதம் ஒத்த வரி 15.4 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. நேரடி வரி, மறைமுக வரிகள் எதிர்பார்த்தபடி அதிகமாக கிடைத்துள்ளன. இன்றைக்கு நிதி பற்றாக்குறையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்பது நல்ல முடிவல்ல. நீண்டகாலமாக அதை கட்டிக்காத்து, பாதுகாத்து வருகின்ற ஒரு பாரம்பரியமான, ஒரு கம்பீரத்தை இன்றைக்கு நாம் இழந்து வருகின்றோம். ஏர் இந்தியாவை திரும்பவும் டாடாவுக்கு விற்டுவிட்டோம். இப்படியான சில குறைகள் உள்ளன. இது கடந்த வந்த புதிய பொருளாதார சூழ்நிலை, அதாவது மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்தபோது ஏற்பட்ட காலத்திலிருந்தே இதற்கான சூழல் அமைந்துவிட்டது. அன்றைக்கு நரசிம்மராவ் இந்த நிறுவனங்களை விற்கலாமா என்று வைத்த தீர்மானத்தால் தான், இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் கையிலிருந்து தனியாருக்கு செல்கின்றது. இன்றைக்கு என்ன நிலைமை? நிதிப்பற்றாக்குறை, இது மட்டுமல்ல விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், அதேபோல சமூகம் சார்ந்த மதம், ஜாதி என்ற பிரச்சினைகளில் நம்மிடம் முன்னேற்றத்திற்கான தடைகள் என்று வைத்துக்கொண்டாலும், பல்வேறு இனங்கள் பல்வேறு மொழிகள் கொண்ட இந்தியாவில் இதையும் தாண்டி நிதியும் சமூக அமைப்பும் தன் பணியை செய்து கொண்டிருக்கின்றன. சிக்கல்கள் இருந்தாலும் செய்யவேண்டிய பணிகள் ஏதோ ஒருவகையில் நடந்துகொண்டு சிக்கலைத் தீர்த்து கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் சண்முகம் செட்டியார் விதைத்த விதைதான் இன்றைக்கு தாக்கல் செய்கின்ற நிதி அறிக்கைகளின் முன்னெடுப்புனுடைய முக்கியமான அணுகுமுறையாகும்.
சண்முகம் செட்டியார் என்ற தமிழர் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விடுதலை பெற்று 50 ஆவது ஆண்டு பட்ஜெட்டை ப.சிதம்பரம் தாக்கல் செய்தார். இன்றைக்கு நிர்மலா சீதாராமன் செய்கிறார் என்றால் டெல்லி மத்திய சர்க்கார் வரலாற்றில். தமிழகம் என்றும் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. இது மட்டுமல்ல வெவ்வேறு காலகட்டங்களில் டி.டி.கிருஷ்ணமாச்சாரி,குடியரசுத் தலைவராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் சி.சுப்பிரமணியம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் எல்லாம் மனதில் கொள்ள வேண்டும். ஓரளவு தமிழ்நாட்டில் இருந்து சென்ற மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் முக்கிய கட்டங்களில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பது தமிழகத்தின் பெருமையாகும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-1-2022.
இந்தியாவின் 75வது ஆண்டு பட்ஜெட்.

காஞ்சிபுரத்தில்தலைவர் கலைஞர், அத்வானி என அகில இந்திய பல தலைவர்கள் கலந்து கொண்ட 2000 ஆண்டு இறுதியில் நடந்த மதிமுக மாநில சுயாட்சி மாநாட்டில் நான் தயாரித்த "மாநில சுயாட்சி" என்ற ஒரு சிறு நூல், வைகோ முன்னிலையில் அன்றைய மத்திய தொழில்துறை அமைச்சராக கர்நாடக முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ணா ஹெக்டே வெளியிட காஷ்மீர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாடு கட்சியின் நிர்வாகியும்,அந்த மாநில அமைச்சர் ராத்தர்பெற்றுக்கொண்டார். என் பெயர் கூட அதில் இடம் பெறவில்லை என்பது முக்கியமல்ல, அதை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டு வர இருக்கின்றேன். இந்த நூல் வெளிவர அன்றைக்கு உதவியாக இருந்தவர் பத்திரிக்கையாளர் நண்பர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் (Outlook). திரும்பவும், 22 ஆண்டுகளுக்கு பின் இன்றைய அரசியல் சூழல் இந் நூல் உள்ளடங்கி இருக்கும். இப்படியான என் பணி தொடரும்….
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
மாநில சுயாட்சி குறித்தான நூல்

சித்ராராமகிருஷ்ணா ஒரு கேள்வி குறி - புதிர்
"2013 ஆண்டின் தலை சிறந்த பெண் தலைவி" என்று "ஃபோர்ப்ஸ்" இதழாலும் புகழாரம் பெற்றவர் தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அலுவலருமான சித்ரா ராமகிருஷ்ணா! பிறந்தது மும்பை; பூர்வீகம் சென்னை; வீணை இசையில் ஆர்வமிக்கவர்.
ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தன் பதவிக் காலத்தில் (ஏப்ரல் 2013 - டிசம்பர்2016) தனக்கு ஆலோசகராக முறைகேடாக நியமித்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் மீது மூன்று கோடி அபராதம் விதித்தது "இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்"(SEBI).
தன் பதவிக் காலத்தில் தேசிய பங்குச் சந்தையின் உள் இரகசியங்கள் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை தன் குரு யோகி ஒருவருக்கு வெளிப்படுத்தினார் என்ற புகாரின் அடிப்படையில் இவருடைய மும்பை வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் இவருடைய ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியன் தொடர்புடைய இடங்கள் ஆகியவற்றில் வருமானவரித்துறை புலனாய்வு அதிகாரிகள் 17-02-2022 அன்று சோதனைகள் மேற் கொண்டுள்ளார்கள்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பார்வைக்கு -
கோதாவரி காவிரி இணைப்பு திட்டம். Chief Minister of Tamil Nadu
M.K.Stalin
---------------------------------
தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று 1980களில் இருந்து தரவுகளைத் திரட்டி, உச்சநீதிமன்றம் வரை முப்பது ஆண்டுகள் தொடர்ந்து நான்கு முறை வழக்குகளைத் தொடுத்து, கடந்த 27 பிப்ரவரி 2012 அன்று சங்கரன்கோவில் இடைத் தேர்தலின் பணியின் போது எனது வழக்கில் தீர்ப்பு வந்தது. அந்த தீர்ப்பை தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது, "நல்ல தீர்ப்பு" என்று பாராட்டியது உண்டு. ஜெயலலிதா நதிநீர் இணைப்பில் திமுக சாதிக்கவில்லை என்று அறிக்கை வெளியிட்டபோது, தலைவர் கலைஞர் என்னுடைய தீர்ப்பைச் சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டது எல்லாம் கடந்த காலம்.
தங்களிடம் இந்த தீர்ப்பை கொடுத்து, தாங்களும் இது குறித்த அறிக்கையை 2017- 2018 ஆம் ஆண்டுகளில் அறிக்கை வெளியிட்ட தெல்லாம் நினைவில் உள்ளன. இந்தநிலையில் சில கருத்துக்களை சொல்ல வேண்டியது கடமை; இதைக் குறித்து அறிந்தவன் என்ற முறையில் தங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
நதிநீர் இணைப்பு என்பது தமிழகம் முழுவதும் பயன்படத்தக்க வகையில் இருக்க வேண்டும். கல்லணை வரை இணைப்பதை விட, தெற்கே குமரி வரை இணைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய வழக்கின் சாரம். சரிதான் என்று உச்சநீதிமன்றமே அதற்கான பரிந்துரைகளை தீர்ப்பில் சொன்னது. அந்த வகையில் சில கருத்துக்களை இந்தக் கடிதம் வாயிலாக தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
ஆறு மாநில பிரதிநிதிகள் அடங்கிய கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் குறித்தான 6 மாநில பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இந்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் நடந்து இருக்கின்றது. மகிழ்ச்சிதான்!
இந்த விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்காமல், பல மாநிலங்கள் கிடப்பில் வைத்துள்ளன. எனவே, திட்டம் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது. ஜூனில் தென்மேற்கு பருவமழை துவங்கினால் திட்டப் பணிகளை துவங்க முடியாது.
அடுத்த கட்டம் மாநில முதல்வர்களின் ஆலோசனை கூட்டத்தை நடத்த வேண்டும். இதன் வாயிலாக மாநிலங்களில் ஒருமித்த ஆதரவை ஏற்படுத்த வேண்டும்.
இதில் தமிழகம் ஆதரிக்கும் திட்டம் என்று எடுத்துக்கொண்டால் கர்நாடகமும், கேரளமும் மகாராஷ்டிராவும் முரண்டு பிடிக்கும். இப்பொழுது தெலுங்கானாவும் முரண்டு பிடிக்கிறது. தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ் மாநிலங்கள் வளம்பெற வேண்டும் என்கிறார் அதேசமயம் நதிநீர் இணைப்பிற்கு முரண்டு பிடிக்கிறார்.
கிட்டத்தட்ட முப்பதாண்டுகளுக்கு மேலாக,உச்சநீதிமன்றத்தில்தொடர்ந்து இது குறித்தான வழக்குகளைத் தொடுத்தவன் என்ற முறையில் சில கருத்துக்களை தமிழக முதல்வரின் பார்வைக்கு வைத்துள்ளேன்.
கழக பணியில் ஈழத்தமிழர் பிரச்சனை, ஜெயலலிதா வழக்கு மாற்றம், தலைவர் கலைஞர் நள்ளிரவில் கைது என்று பல நேரங்களில் முக்கிய பணியாற்றியவன் என்ற தகுதி நிலையில், சில கருத்துக்களை தமிழக முதல்வரின் பார்வைக்கு வைக்க வேண்டியது என்னுடைய கடமை.
கோதாவரி நதியின் வழியாக 1100 டிஎம்சி தண்ணீர் வீணாக வங்ககடலுக்கு ஆண்டுதோறும் செல்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம், சத்ரா அருகே மகா பாலேஸ்வரியில் கிருஷ்ணா நதி, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா வழியாக 1300 கிலோ மீட்டர் ஓடி வங்கக் கடலில் கலக்கின்றது. கோதாவரி, கிருஷ்ணா நதியில் 55 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், தெலுங்கானா அரசு சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது திட்டமிட்டு இணைக்கப்பட்டு உள்ளது என்பது கடந்தகால செய்திகள். இதற்காக போலிஸ்வரம் நீரேற்று திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி இணைப்பு என்ற வகையில் கல்லணையில் இறுதி பெறும் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, 247 டிஎம்சி, கோதாவரி நீரை கிருஷ்ணா, பெண்ணையாறு, பாலாறு, காவிரி ஆற்றுக்கு, 143 நாட்களில் திருப்ப திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் கால்வாயில் அனுப்ப வேண்டிய நீரின் அளவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி ஜூனில் 20 நாட்களில் 12.7; ஜூலையில் 31 நாட்களில் 61.3; ஆகஸ்டில் 31 நாட்களில் 68.2; செப்டம்பரில் 30 நாட்களில் 51.9; அக்டோபரில் 31 நாட்களில் 45.9 டிஎம்சி நீரை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 80 முதல் 90 டிஎம்சி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது. இதை 100 டிஎம்சி க்கு மேல் வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி வரைக்கும் இணைக்கும் இந்த நதி தீரங்களை, ஏன் வைகை தாமிரபரணி குமரி மாவட்ட நெய்யாறுரோடு இணைக்கக் கூடாது என்றுதான் நான் உச்ச நீதிமன்றத்தில் வைத்த கோரிக்கை. அந்த கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பரிந்துரைத்து நவலவாலா குழுவும் அமைக்கப்பட்டது. காவேரி வரைக்கும் வருகின்ற அந்த வாய்க்கால் ஏன் வைகை, தாமிரபரணி குமரி மாவட்டத்தின் நெய்யாறுரோடு இணைக்கக் கூடாது. ஏன்?
நான் இது குறித்து பிரதமர்கள் ஆக இருந்த வி.பி.சிங், நரசிம்மராவ், தேவகவுடா, அதேபோல வாஜ்பாய் காலத்திலும் அதற்குப் பிறகு மோடி பிரதமரான போது உமாபாரதியை நேரடியாக சந்தித்து இந்த மனுக்களையெல்லாம் கொடுத்தது என்னுடைய முகநூல் பதிவுகள், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளேன்.
தொடர்ந்து 40 ஆண்டுகாலமாக நான் இந்த பிரச்சினைகளில் ஈடுபட்டு வருவதால், என்னுடைய கருத்து என்னவென்றால், முதல்வரின் பார்வைக்கு கோதாவரி, கங்கை, காவிரி வரை மட்டுமல்லாமல் மேலும் அதை தெற்கே நீட்டித்து வைகை தாமிரபரணி நெய்யாறுடன் இணைக்க வேண்டும் என்பது வைக்கும் கருத்தாகும். இது சற்று கவனிக்க வேண்டிய விஷயம். இதை ஒரு பொறுப்பானவன் என்ற முறையில், ஒரு 50 ஆண்டுகாலம் மேலாக அரசியலில் இருந்தவன் என்ற நிலையில், இதை குறித்து முற்றிலும் அறிந்தவன் என்ற வகையில், இந்த கோரிக்கையை முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு வருகிறேன்.
குறிப்பாக, தென்மாவட்டங்கள், எங்களுடைய பகுதி வானம் பார்த்த கரிசல் மண் பகுதிகளான விருதுநகர் மாவட்டம், வட திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்ட வடபகுதி, தூத்துக்குடி மாவட்டத்தின் வடபகுதியில் அடிக்கடி வறட்சியை சந்திக்கின்றது. அந்த கரிசல்மண் பகுதிக்கு இந்த நீர் திருப்பினால் தான் எங்களுக்கு பயன்படும். அந்த வகையில்தான், தீபகற்ப நதிகள் இணைப்பு என்ற திட்டம், தென்னக நதிகள் இணைப்பு திட்டம் என்பது முக்கியமான திட்டம்.
கோதாவரி, காவிரி இணைப்பு என்பது அதில் உள்ளடங்கியதுதான். அதோடு அச்சங்கோவில், பம்பையை கேரளாவில் இருந்து திருப்பி அதை சாத்தூர் வைப்பாறோடு இணைத்தால், தென் மாநிலங்களுக்கு ஒரு சிறப்பான திட்டங்கள் அமைந்து, தென்னக நதிகள் இணைந்து விடும். தென்னக நதிகள் எப்படி இணையும் என்றால், அது திரும்ப, கோதாவரி மகாநதியையும் இணைக்கவேண்டும். இணைத்தால் தீபகற்ப நதிகளுடைய இணைப்பு முடிவாகும். தீபகற்ப நதிகளை இணைத்து விட்டால், வடபுலத்து இமய மலை சார்ந்த நதிகளான கங்கை, பிரம்மபுத்திரா, மற்றும நர்மதா-தபதியை மகாநதியில் இணைக்கலாம்.
ஏற்கனவே தென்மாநிலங்களில், மத்திய பிரதேசத்தில் செய்யக் கூடிய கேன்வா பேட்வா இணைப்பு திட்டங்கள், பத்தாண்டுகளாக மேலாக உருவாகிக் கொண்டு வருகிறது. இப்படி செய்தால், இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தும் இணைத்துவிடலாம். வடபுலத்து நதிகளையும், தீபகற்ப நதிகளையும் இணைத்து விடலாம் என்பதுதான் இந்தத் திட்டம்.
இதற்காக தொடர்ந்து இந்திரா காந்தி காலத்தில், அவருடைய அமைச்சரவையில் இருந்த கே.எல் .ராவ் தலைமையிலும், அதற்கு பிறகு மொராஜி தேசாய் பிரதமராக இருந்த போது, கேப்டன் தஸ்துர் தலைமையில் பூமாலை திட்டமும், அதன் பிறகு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது சுரேஷ் பிரபு குழுவும், இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே, நாட்டின் விடுதலைக்கு முன்னர் டெய்லர் கொடுத்த திட்டங்களும் இந்த இணைப்பு தான். இந்த இணைப்பை சிந்திக்காமல் காவேரி கோதாவரி மட்டும் இணைத்தால் போதாது என்பதே எங்களைப் போன்றவர்களின் கருத்து. இல்லை என்றால் முழுமையாக தமிழகத்திற்கு நீர்வரத்து வராது. இது மேலும் நீட்டிக்கப்பட வேண்டும். தண்ணீர் வரத்து கல்லணையோடு நிறுத்திவிட்டால் அது முழுமை அடையாது. இது நீண்ட காலத் திட்டம் என நதிநீர் இணைப்பு குறித்து விரிவான அறிக்கை, தேசிய நீர் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது.
நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில், காவிரி கோதாவரி இணைப்பு திட்டம் குறித்து ஒருபுறம் அறிவித்தாலும், இந்த நதிகளை தென் தமிழகம் வரை செல்ல வேண்டும்.
காவேரி கோதாவரி இணைப்பு என்பது தெலுங்கானா மாவட்டம் ஈச்சம் பள்ளியில் இருந்து தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வரை 1211 கிலோமீட்டருக்கு கால்வாய் அமைக்கப்பட்டு, 19 கிலோ மீட்டர் சுரங்க நீர் பாதை அமைக்கப்படவும் வேண்டும். இத்திட்டம் வாயிலாக பயன்பெறும் பகுதிகள் 26 லட்ச ஹெக்டர் நிலங்களுக்கு புதிய பாசன வசதி பெறும் என்று சொல்கின்றார்கள். அது மட்டுமல்ல இரண்டு இடங்களில் 60 மெகாவாட்,120 மெகாவாட் திறனுடைய மின் நிலையங்களும் அமைக்கலாம். கோதாவரியின் குறுக்கே ஈச்சம்பள்ளியில் எண்பத்தி ஏழு மீட்டர் நீளத்திற்கு, 1589 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஒரு கதவணை கட்டி, அதில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி உபரி நீரை வெளியேற்றி, அங்கிருந்து நலகொண்டா மாவட்டத்திற்கு முசியணை வழியாக, கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நாகர்ஜுனா அணைக்கு நீர் வந்து சேர்ந்து, அதிலிருந்து திருப்பப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக 73 ஆயிரத்து 616 கோடி மதிப்பீடாகும்.
தெலுங்கானா மாநிலம், மெகபூபா மாவட்டம் ஜனம் பேட்டையிலிருந்து, கோதாவரி ஆற்றில் இருந்து 1752 கிலோமீட்டர் கால்வாய் அமைத்து, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வரும். இதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். இதிலும் 22 கிலோ மீட்டருக்கு சுரங்கப்பாதை நீர் வர அமைக்க வேண்டும். நீரேற்று முறையில் தண்ணீர் எடுத்துச் செல்வதற்காக, 120 கிலோ மீட்டர், மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையம் அமைக்கப்பட வேண்டும். சோலார் பேனல்கள் அமைத்து, மின் உற்பத்தி செய்யவும் திட்டங்கள் இதில் உள்ளடக்கியதாகும். இத்திட்டத்தால் 19.6 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மதிப்பீடு 371 கோடியாகும். இது இரண்டாவது அமைப்பு முறை.
முதல் அமைப்பு என்பது தெலுங்கானா மாநிலத்தில் தொடங்கி, நாகர்ஜுனா அணைகள் சேர்வது. இரண்டாவது என்றால் கட்டம் என்பது, மெகபூபா நகர் ஜனம் பேட்டையில், கோதாவரி ஆற்றில் இருந்து நீரைத் திருப்பி நாகர்ஜுனா அணையில் சேர்ப்பதாகும்.
மூன்றாவது, ஜனம் பேட்டையிலிருந்து நாகர்ஜுனா அணை வரை பைப்லைன் வழியாக நீர் எடுக்க திட்டமிடப்பட்டு அங்கிருந்து கால்வாய் அமைத்து கல்லணையில் சேர்வது. இது மூன்றாவது கட்டம்.
இது மூன்று கட்டங்களாக இந்த இணைப்பு பணிகளுக்காக திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டாலும், நம்முடைய கோரிக்கை குறிப்பாக திருச்சிக்கு தெற்கே உள்ள மாவட்டங்கள் சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் இந்த நீர் திருப்பம், நீர்வரத்து திருப்பம், இணைப்பும் இருக்க வேண்டும்.
இந்த மூன்று கட்ட அமைப்புகளிலும், ஈச்சம் பள்ளி கல்லணை இடையிலான முதல் கட்டம் மத்திய அரசு ஏற்கனவே தேர்வு செய்துவிட்டது. தமிழக அரசும் ஏற்கனவே இதை ஆதரித்துள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகம், மகாராஷ்டிரா, சட்டிஸ்கர் மாநிலங்கள் இதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும். அதன் ஒத்துழைப்பு வேண்டும். இந்த மாநிலத்தின் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தும் வகையில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முன்னெடுக்க வேண்டும். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியும் கடனுதவி வழங்கவும் அனுமதி கொடுத்துள்ளது.
இத்திட்டம் வாயிலாக 247 டிஎம்சி கோதாவரி உபரி நீரை, கிருஷ்ணா, பெண்ணாறு, பாலாறு, காவிரி ஆற்றுக்கு திருப்ப வேண்டும் என்பதுதான் இதனுடைய முழுமையான நோக்கம்.
இத்திட்டத்தின் கீழ் தெலுங்கானா ஜெய்சங்கர், வாரங்கல், கம்மம், நலகொண்டா மாவட்டங்கள் பயன்பெறும். ஆந்திராவில் கிருஷ்ணா, குண்டூர், பிரகாசம், சித்தூர், நெல்லூர் மாவட்டங்கள் குறிப்பாக தமிழகத்தின் திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்கள் பயன்பெறும்.
சென்னைக்கு குடிநீர் ஏற்கனவே ஆந்திராவின் தெலுங்கு கங்காவில் இருந்து வருகிறது. சென்னைக்கு குடிநீர் பயன்படுகிறது.
கோதாவரி நதி, கங்கை, பிரம்மபுத்திராவுக்கு அடுத்தபடியாக நீளமான நதி ஆகும். இதில் வீணாகப் வங்க கடலுக்கு செல்லும் நீரில் ஒரு பகுதியை அங்குள்ள மீன்கள் கடல் பாதுகாப்பு என்ற வகையில் போக, எஞ்சிய நீரை திருப்புவதற்கான திட்டங்கள்தான் இது. சுற்றுச்சூழலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும், மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகமும் இதற்கான அறிக்கைகளை தயார் செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கின் அடிப்படையில், ஒரு பக்கம் காவிரி, கல்லணை வரை கோதாவரியை இணைத்து மேலும் திட்டங்களை விரிவுபடுத்தி, இந்த நதியை வைகை, தாமிரபரணி, குமரிமாவட்ட நெய்யாறோடு இணைப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு, எதிர்கால தொலைநோக்கு பணிகளோடு செய்ய வேண்டும் என்பதே என்னுடைய கோரிக்கையாக, ஒரு அரசியலாலராக, இதற்காக 30 ஆண்டுகாலம் உச்சநீதிமன்றத்துக்கு சொந்தப் பொறுப்பில் அலைந்து திரிந்து, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழக்கை நடத்திய ஒரு சாதாரண பிரஜையாக, முதல்வரிடம் இந்த கோரிக்கை வைக்கின்றேன். முதல்வர் இதை பரிசீலிக்க வேண்டும்.
அன்புள்ள,
கே. எஸ் .இராதா கிருஷ்ணன்.
20-2-2022.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பார்வைக்கு - கோதாவரி காவிரி இணைப்பு திட்டம்.

தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானம்.
இதில் தேவர் நாடும் வராது, நாயக்கர் நாடும் வராது. மாநில சுயாட்சி வேண்டும்- பார்வர்ட்ப்ளாக்
——————————————————-
சட்டப்பேரவையில் 1974ஆம் ஆண்டு மாநில சுயாட்சித் தீர்மானத்தின் மீதான விவாதங்களில் ”மாநில சுயாட்சி”க்கு ஆதரவளித்துப் பேசிய “பார்வர்ட் ப்ளாக்” கட்சியினரை!
அன்றைய காரியாபட்டி சட்டமன்றப்பேரவை உறுப்பினர், பார்வர்ட் ப்ளாக் கட்சியைச் சேர்ந்த “ஏ.ஆர்.பெருமாள்” மாநில சுயாட்சித் தீர்மானத்திற்கு ஆதரவாகப் பேசியபோது,
கம்யூனிஸ்டு உறுப்பினர் எஸ்.வடிவேல், “திரு. பெருமாள் அவர்கள் மாநில சுயாட்சி தீர்மானத்தை இவ்வளவு தூரம் வற்புறுத்தி பேசி கடுமையாகப் பேசியது மாநில சுயாட்சி வந்தா தேவர் நாடு என்று ஒன்று அமைப்பதற்கு இதில் அஸ்திவாரம் இடுகிறாரா என்று அறிய விரும்புகிறேன்” என்று கேள்வி எழுப்புகிறார்!
ஆனால், திரு. ஏ. ஆர். பெருமாள் அவருக்கு மாண்புடன் பதிலளித்தார்: “இதில் தேவர் நாடும் வராது, நாயக்கர் நாடும் வராது. மாநில சுயாட்சி வேண்டுமென்று கேட்பது, நமக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வேண்டும் என்பதற்காகத்தான் சோவியத் ரஷ்யாவில் ஒரு மாநிலம் பிரிந்து செல்லக்கூடிய உரிமையோடு அங்கே ஐக்கியமாக இருக்கிறது என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்த்து இந்த உருப்படியான காரியத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்க வேண்டாம் என்று தோழமைக் கட்சி என்ற முறையில், எங்களைப் போல் ஒரு இடதுசாரிக் கட்சி என்ற முறையில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.”
மேலும் அன்றைய அதிமுகவினர் அப்போது ஆட்சியைக் கலைக்க வேண்டும், கூறியதைப் பற்றி திரு. ஏ.ஆர்.பி,
“சட்ட மன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலில் நில்லுங்கள் என்று சட்ட மன்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் பேசினார். என்ன தொடர்பு இருக்கிறது? என்ன என்றே புரியவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து யாரேனும் விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்குப் போகிறார்கள் என்றால் அவர்கள் எல்லாம் சட்ட மன்றத்தைக் கலைக்க வேண்டுமென்று மூன்று மாத காலத்திற்கு அவசரப படுகிறார்கள். சட்ட மன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தி அமைச்சராக வந்துவிட வேண்டுமென்ற அவருடைய அவசரத்தைக் காட்டி இருக்கிறார். கலைஞர் அவர்கள் தீர்மானத்தை எந்த அளவுக்கு ஆதரிக்கிறோம், எந்த அளவுக்கு எதிர்க்கிறோம், ஆதரிப்பதன் அடிப்படை என்ன, எதிர்ப்பதன் அடிப்படை என்ன என்று சொல்லவில்லை. திரு. செழியன் அவர்கள் மாநில சுயாட்சி என்றால் சரியான விளக்கம் தேவை என்றார். அண்ணா என்ன சொன்னார் என்பதை மறந்துவிட்டார்கள்போல.”
ஒரு ஒற்றுமை: 1974 மாநில சுயாட்சிப் பிரகடனத்திற்கு முன்னதான 1971 தேர்தலின்போது திமுக கூட்டணியில் இருந்த பார்வர்ட் பிளாக் கட்சி மாநில உரிமைகள் இழந்து மீண்டும் தன்னாட்சிக் குரல் எழுப்பப்பட்ட 2021 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியே!
படத்தில்: (இடமிருந்து வலம்) திரு.ஏ.ஆர்.பெருமாள், தலைவர் கலைஞர், திரு.பி.கே.மூக்கைய்யா. 70களில் எடுக்கப்பட்ட படம்.
"1974 மாநில சுயாட்சி" -ஆழி பதிப்பகம் Aazhi Publishers
தலைவர் கலைஞரின் மாநில சுயாட்சித் தீர்மானம். மாநில சுயாட்சி வேண்டும்

இன்று உ.வே.சா பிறந்தநாள்.
“நான் என் வீட்டின் மேலே ஒரு கொட்டகையை அமைத்துக்கொண்டு அங்கே என் ஆராய்ச்சிகளை நடத்திவந்தேன். பொண்டெனூ வந்தபோது என் மேல் வெயில் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்; அவர் மேலும் அடித்தது. அவர், “இந்தமாதிரி இடத்தில் இருக்கிறீர்களே! வேறு நல்ல இடத்தில் இருந்து வேலை செய்யக் கூடாதா?” என்று கேட்டார். நான், “என்னுடைய நிலைக்கு இதுதான் முடியும். இந்தத் தேசத்தில் இந்த நிழல் கூட இல்லாமல் கஷ்டப்படும் வித்துவான்கள் எவ்வளவோ பேர்கள் இருக்கிறார்கள். என் இளமையில் மரத்தடியிலும் வீட்டுத்திண்ணை யிலும் இருந்து படித்து வந்த மாகா வித்துவான்களைப் பார்த்திருக்கிறேன்” என்றேன். இவ்விஷயம் அவருக்கு மிகவும் புதுமையாக இருந்தது...”
- ‘கடல் கடந்து வந்த தமிழ்’ என்ற கட்டுரையில், நினைவு மஞ்சரி முதல் பாகம்.
( பிரெஞ்சு அறிஞரான ஜூலியன் வின்ஸோன் என்பவர் தனது தமிழ் சுவடி ஆராய்ச்சி குறித்து எவ்வளவு அக்கறை காட்டினார் என்பதை உ.வே.சா இக்கட்டுரையில் விளக்குகிறார். அவரது மாணாக்கரான பொண்டெனூ என்பவர் தன்னைப் பார்க்க வந்த தருணத்தையே மேற்கண்டவாறு எழுதியிருக்கிறார்).
"தமிழன்னையின் இளமைப் பருவத்தே அவள் புனைந்தருளிய சிறந்த பொற்பணிகள் பலவற்றைத் தேடிக்கண்டு அவற்றை மாசு நீக்கி மீண்டும் அழகுறுத்தி அவள் தெய்வத் திருமேனியில் அணிவித்து மகிழ்ந்த தமிழ்ச்செல்வர் யாவர்? தமிழ்ப் புலமைக்கு உரையாணியாக விளங்கும் தமிழ்ப் பெருந்தகையர் யாவர்? தமிழ்க் கல்வி புதியதோர் மேம்பாடுற்று எவரும் போற்றத்தக்க நிலையிலே தற்காலத்து நிலவுவதற்குக் காரணமாயுள்ள அருந்தமிழ்ப் பேராசிரியர் யாவர்? தமிழ் மக்கள் தங்களுடைய புராதன நாகரிகத்தையும், தொன்மை, பெருமை முதலியவற்றையும் நன்கு உணர்ந்து களிப்புறும் வண்ணம் செய்வித்த தமிழ் மகனார் யாவர்? இச்செயற்கரிய செயல்களையெல்லாஞ் செய்த பெரியார் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்திய கலாநிதி டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களே ஆவர்.. "
- டாக்டர் எஸ்.வையாபுரிப்பிள்ளை (1942ல் திருவல்லிக்கேணி ஹிந்து இளைஞர் சங்க விழாவில் பேசிய குறிப்பினின்றும் எழுதியது). நன்றி: "உ.வே.சா பன்முக ஆளுமையின் பேருருவம்" தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு.
இன்று உ.வே.சா பிறந்தநாள்

சமகால மக்கள் அதிகம் உதிர்க்கும் வார்த்தை, நல்லவங்க யாரு தேர்தலில் நிக்குறா? என்பது தான். கொள்கை, கோட்பாடு,வாக்குறுதி முழக்கங்களை விட களத்தில் காசு முக்கியம். Vote for sales….
எலக்சன் என்றாலே காசு கிடைக்கும் என்ற மன நிலைக்கு மக்களை கொண்டு வந்துட்டாங்க. பிராக்டிகல பார்த்த அது தொழில் வியாபாரம் ஆகி போகிறது. போட்ட முதலீடு விட பல மடங்கு திரும்ப எடுக்க தான் பார்ப்பாங்க. கையை நீட்டி காசை வாங்கிட்ட அவங்க கிட்ட கையை கட்டி தான் நிற்க வேண்டும். குறை அவர்களிடம் இல்லை மக்களாகிய நம்மிடம் தான் உள்ளது. பிறகு எப்படி உரிமைகளை நியாங்களை நேர்மையாக போராடி பெற…?
இறுதியில்
ஐஸ்பெட்டியில்
அடுத்தவர்களுக்குக் நாம்
காட்சிப்பொருளாகிவிடுகிறோம்…
என்பதை புரிதல் அற்ற மந்தை….
எங்கும் எதிலும் காட்சி பிழைகள்.
அன்றும்…
இன்றும்….
சமகால மக்கள் அதிகம் உதிர்க்கும் வார்த்தை, நல்லவங்க யாரு தேர்தலில் நிக்குறா? என்பது தான்.