26.9.2009 அன்று காஞ்சியில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியாவின் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை தலைவர் கலைஞர் அவர்களின் விருப்பத்தின் பேரில் துணை முதல்வரும், கழகத்தின் பொருளாளருமான தளபதியார் அவர்கள் முன்மொழிந்து வலியுறுத்தினார். அந்த தீர்மானத்தில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்கு ஏற்ற வகையில் உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தப் பட்டுள்ளது. தலைவர் கலைஞர் அவர்களின் இந்த அக்கறையும், ஆர்வமும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். இது ஒரு துணிவான நடவடிக்கை ஆகும். தலைவர் கலைஞர் அவர்களின் இந்த அறிவிப்புக்கு உலகத் தமிழ் சமுதாயம் நன்றி செலுத்த வேண்டும். இந்த தீர்மானத்தை பரிசீலித்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், உரிய முயற்சிகள் எடுக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் சொல்லி இருப்பது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். இதன் தொடர்ச்சியாக தலைவர் கலைஞர் அவர்கள் இலங்கைக்கு, தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய பத்து பேர் கொண்ட குழுவை அனுப்பினார்.

இலங்கையில் 1983இல் ஏற்பட்ட அரசு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் தாய்த் தமிழகத்தை தஞ்சமடைந்தனர். இவர்கள் உலக அளவில் இன்றைக்கு அகதிகளாக சோகமான வாழ்வை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மட்டும் அரசு முகாம்களில் 75,000 அகதிகள் இருப்பதாக கணக்கு உள்ளது. இதற்கு மேலும் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ஈழத் தமிழர்கள், தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற பகுதிகளில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இவர்கள் யாவரும் சற்று வசதியாக வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இதில் இன்னொரு செய்தி என்னவென்றால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு சிறப்பு முகாம் 1991ஆம் ஆண்டில் கலைஞர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டது.

ஈழத் தமிழ் அகதிகளுக்கு வேண்டிய அன்றாட உதவித் தொகையும் கூட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்றைக்கு திபெத், மியான்மர், ஆப்கான், வங்கம், நேபாளம் போன்ற நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்துள்ளனர். நாதியற்ற நிலையில் வாழும் ஈழத் தமிழர்கள் நம் சொந்த உறவுகள் என்ற நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கடமையை இதய சுத்தியோடு தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து 1960இலிருந்து ஆற்றி வருகின்றார். காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே இப்பிரச்சினை குறித்து அக்கறையோடு கடமையாற்றியவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள்.

பழைய செய்தி ஏடுகளைப் புரட்டும்பொழுது ஏறத்தாழ 50 ஆண்டுகள் தலைவர் கலைஞர் அவர்கள் இலங்கையில் வாடும் தமிழின மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் எப்படியெல்லாம் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிகிறது. தந்தை செல்வாவும், அமிர்தலிங்கமும் பிரச்சினைகள் ஏற்படும்பொழுதெல்லாம் தலைவர் கலைஞர் அவர்களை சந்தித்தபோது, அவர்களுக்கு இதயசுத்தியோடு தனது ஆதரவை தலைவர் கலைஞர் அளித்தார்.

1956ஆம் ஆண்டு சிதம்பரத்தில் நடைபெற்ற கழகப் பொதுக் குழுவில் இலங்கையில் வாடும் தமிழர்கள் சம உரிமையோடும், அமைதியாக வாழக் கூடிய அளவில் நிலைமைகள் இலங்கையில் அமைய வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழகத்தில் முதன் முதலில் முன்மொழிந்தவரே தலைவர் கலைஞர் அவர்கள்தான். அந்த தீர்மானத்தை பூவாளுர் பொன்னம்பலனார் வழிமொழிந்தார்.

1960களில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் இப்பிரச்சினை குறித்து பொதுக் கூட்டங்களில் மக்கள் மத்தியில் பிரச்சாரத்திலும், அவ்வப்பொழுது ஈழத் தமிழர்கள் ஆதரவு கூட்டங்களிலும் அவர்களுக்கு ஆதரவு அளித்ததையும் யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து கழகம் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகளில் அக்கறை எடுத்துக் கொண்டதற்கு வரலாறு சாட்சியாக இன்றைக்கு இருக்கின்றது.

1977இல் தந்தை செல்வா மறைந்த பிறகு அப்பொறுப்புக்கு வந்த அமிர்தலிங்கனார் தாய்த் தமிழகம் வந்தபொழுது அவர்களுக்கு ஆதரவாகவும், டில்லி சென்று வடபுலத் தலைவர்களை சந்திக்க துணை நின்றவர் தலைவர் கலைஞர் அவர்களே.

1983இல் இலங்கையில் கோரமாக துயரங்கள் நடைபெற்றபொழுது தலைவர் கலைஞர் அவர்களும், பேராசிரியர் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பதவி விலகினர். வெளிக்கடை சிறையில் குட்டிமணி, தங்கதுரை, ஜெகன் ஆகியோருக்கு மரணத் தண்டனை அளித்தபொழுது அதனை தடுக்க முதன்மை குரலாக கொடுத்து மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இதுகுறித்து தலைவர் கலைஞர் முதல் கையொப்பமிட்ட கடிதம் அனுப்பப்பட்டது.

கொடூரம் உச்சத்தில் நர்த்தனமாடிய நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகம் முழுதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சிறை சென்றனர். தலைவர் கலைஞர் அவர்கள் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஈழத் தமிழர்களுக்காக கழக உடன்பிறப்புகள் தீக்குளித்தது கண்டு தலைவர் கலைஞர் மனம் பதறி கவலையுற்றார்.

1983இல் இராமநாதபுரத்தில் கழக மாநாடு ஈழ விடுதலை மாநாடாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. அப்போது இலங்கையில் தமிழர்கள் கொடுமையாக கொல்லப்படுகின்ற நேரம். அந்த மாநாட்டை அன்றைக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், அன்றைய நாடாளுமன்ற உறுப்பினருமான சத்யேந்திரன் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து நடத்தினார். அம்மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு குரல்கள் அருகிலிருக்கும் இலங்கை நோக்கி ஒலித்தது.

ஐ.நா.மன்றத்தை ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிட கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி இலட்சக்கணக்கில் கையொப்பம் பெற்று கழகம் அனுப்பியது. அம்மாதிரி தந்திகள், கடிதங்கள் மத்திய அரசுக்கு பல்வேறு கட்டங்களில் இப்பிரச்சினையில் கழகத் தோழர்கள் அனுப்பினர்.

நியூயார்க்கில் டாக்டர் பஞ்சாட்சரம் நடத்திய முதல் ஈழ விடுதலை மாநாட்டிற்கு, தி.மு.க. பிரதியாக அன்றைய வை.கோபால்சாமியை கலைஞர் அனுப்பினார். அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இன்றைய துணை முதல்வர் தளபதி வந்து வழியனுப்பி வைத்தார்.

சட்டமன்றத்தில் தொடர்ந்து இப்பிரச்சினைக் குறித்து தலைவர் கலைஞர் பேசியதும், கழக மாநாட்டுத் தீர்மானங்கள், பொதுக்குழு, நிர்வாகக் குழு தீர்மானங்கள் பல சமயங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டது. இதில் 27.11.1987இல் நிர்வாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஈழ வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும். பல்வேறு கட்டங்களில் தலைமைக் கழகத்தின் சார்பில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு தமிழகமெங்கும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

தலைவர் கலைஞர் அவர்கள் ‘டெசோ’ என்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை உருவாக்கினார். அதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழர் தேசியக் கட்சித் தலைவர் பழ.நெடுமாறன், பார்வர்டு பிளாக் தலைவர் மறைந்த அய்யன் அம்பலம் ஆகியோரை உறுப்பினர்களாக்கி, அந்த அமைப்பு வேலூர், திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களில் பெரிய மக்கள் திரள் பேரணி நடத்தியது. இறுதியாக 4.5.1980 அன்று ஈழத் தமிழர் நலன் காக்க அகில இந்திய டெசோ மாநாட்டை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் வாஜ்பாய், என்.டி.ராமராவ், எச்.என்.பகுகுணா, ஜஸ்வந்த் சிங், ராமுவாலியா, உபேந்திரா, ராச்சய்யா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் கலந்து கொண்டனர். அத்துடன், ஈழத் தமிழர் தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவ.சிதம்பரம், சம்பந்தன், சந்திரஹாசன், ஈழவேந்தன் போன்றவர்களோடு, எல்.டி.டி.ஈ., டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ் போன்ற போராளி இயக்கங்களும் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் பாண்டியன் ஓட்டலில் நடைபெற்றது. அதில் தலைவர் கலைஞர், என்.டி.ஆர். ஆகியோர் போராளிக் குழுக்களுக்கிடையே சகோதர,  பாச ஒற்றுமையை பாதுகாக்க கோரிக்கை வைத்தனர்.

ஈழத் தமிழர் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹசாசன், சத்தியேந்திரா போன்றவர்கள் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நாடு கடத்தியபோது, 24 மணி நேரத்தில் அதைக் கண்டித்து மாபெரும் பேரணியை சென்னையில் தலைவர் கலைஞர் அறிவித்தார். அந்தப் பேரணியின் எழுச்சிக் கண்டு நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்பவும் தமிழகம் அழைக்கப்பட்டனர்.

தலைவர் கலைஞர் பிறந்த நாள் விழா 3.6.1986 அன்று ஈழ தமிழர்களுக்காக உண்டியல் மூலம் கழக உடன்பிறப்புகள் கொடுத்த நிதியை தலா 50,000 வரை போராடும் அமைப்புகளுக்கு வழங்கினார்.

இலங்கைக்குச் சென்ற அமைதிப் படை சென்னைக்குத் திரும்பும்போது அங்குள்ள தமிழர்கள் பட்டத் துயரங்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் வரவேற்க செல்லவில்லை என்பதும், 1989இல் தான் முதல்வர் ஆனவுடன் சென்னை துறைமுகக் கழக விருந்தினர் விடுதியில் இன்றைக்கும் அனைவர் நெஞ்சங்களில் வீற்றிருக்கும் முரசொலி மாறன் அவர்கள் உடன் இருக்க, ஈழத் தமிழ் போராளிகளை அழைத்து அவர்களது கோரிக்கைகளை செவி சாய்த்து கேட்டு, அன்றைய பிரதமர் இராஜிவ் காந்தியிடம் இதுகுறித்து விவாதிக்க தலைவர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை யாரும் மறைக்க முடியாது. இப்படி தலைவர் கலைஞர் ஈழத் தமிழர்களுக்காக எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள், நிகழ்வுகள் பெரிய நீண்ட பட்டியலாகும்.

16.10.2008 அன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் இப்பிரச்சினைக் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு மத்திய அரசை வலியுறுத்தியதும், 24.10.2008 அன்று மனித சங்கிலியும், 4.12.2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அனைத்துக் கட்சியினர் எடுத்துச் சொல்லி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டியது எல்லாம் யாரும் மறந்துவிட முடியாது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியையே 1991இல் இழந்த பெருந்தகைதான் நமது தலைவர் கலைஞர் அவர்கள். திடீரென்று இன்று ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஜெயலலிதாவால் பொடாவில் அடைக்கப்பட்ட தலைவர்கள் விடுதலை பெற தலைவர் கலைஞர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், போராட்டங்கள் எண்ணிலடங்கா. இன்றைக்கு அந்தத் தலைவர்கள் அம்மையாரிடம் சேர்ந்து பக்க வாத்தியம் வாசிக்கின்றனர். அதை நாம் பார்த்து ‘பலே, தமாஷ்!’ என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது. 

பல கோடிகணக்கான மதிப்பில் உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் திரட்டி அல்லல்படும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைவர் கலைஞர் அனுப்பி வைத்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மே மாதம் ஈழத்தில் கொடிய நிலை முற்றியபொழுது தன்னுடைய உடல்நலனையும் கூட சிந்திக்காமல் அண்ணா நினைவிடம் சென்று யாரிடமும் தெரிவிக்காமல் உண்ணாநோன்பு போராட்டம் மேற்கொண்டதைப் பார்த்து தமிழகமே பதறியது.

தலைவர் கலைஞர் அவர்களுடைய சீரிய முயற்சியால் ஐந்து நாட்கள் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு டி.ஆர்.பாலு, கவிஞர் கனிமொழி, சுதர்சன நாச்சியப்பன், தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கொண்ட குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டனர். அங்குச் சென்று முகாம்களை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல், ஈழத் தமிழர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாணவர்கள், பெண்கள் என சகலத் தரப்பினரையும் சந்தித்து விவரம் அறிந்தனர். இறுதியாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே அவர்களை சந்தித்து அங்குள்ள தமிழர்கள் நலன் குறித்து பேசியதோடு மட்டுமல்லாமல் தமிழர் பகுதிகளில் தமிழர்களை உடனே குடியமர்த்த வேண்டும் என்று கோரினர். மேலும் தமிழர் பகுதிகளில் சிங்களவர்களை குடியமர்த்தக் கூடாது என்றும் நாடாளுமன்ற குழு வலியுறுத்தியதை ராஜபக்ஷே ஏற்றுக் கொண்டார். குடியமர்த்தும் பிரச்சினைதான் தொடர்ந்து ஈழத் தமிழர் பிரச்சினையில் தீராமல் இருந்தது. தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தாக்குதலை நிறுத்துமாறு இலங்கை அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணவேண்டும் என வற்புறுத்தினர். தலைவர் கலைஞர் அனுப்பிய நாடாளுமன்ற குழுவிடம் ராஜபக்ஷே கொடுத்த உத்தரவாதத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஈழத் தமிழர் புனரமைப்புப் பணியிலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராஜபக்ஷே உறுதி அளித்துள்ளார்.

இந்த குழு உலக சமுதாயத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. இதை விட்டுவிட்டு ‘எங்களை அழைக்கவில்லை’, ‘இவர்கள் போய் என்ன செய்து விட்டனர்’ எனக் கோட்டான்கள் மாதிரி சத்தம் போடுவது நியாயமில்லை. அதுமட்டுமல்லாமல்; அர்த்தமற்ற புலம்பல்களால் ஒட்டுமொத்த தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை என்பது ராஜபக்ஷேவுக்கு தித்திப்பான செய்தியாகிவிடும். இதையெல்லாம் யோசிக்காமல் இங்குள்ள அரசியல் லாபத்துக்காக எதையாவது பேசுவதைவிட, இதேமாதிரி குழு அமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்று சென்று இருக்கலாமே. இவர்களிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களைக் கொண்டு முயற்சி செய்யாதது ஏன்? சொந்த செலவில் அந்தந்த கட்சி அனுப்பிய குழுவைப் பார்த்து விதண்டாவாதங்களைப் பேசுவது இவர்களது வாடிக்கையாகும்.

ஈழத் தமிழர் பிரச்சினை தனக்குத் தான் பாத்யமானது என்று கூறும் வைகோ, 199899 காலகட்டத்தில் வாஜ்பாயின் செல்லப்பிள்ளை தான் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். அப்போது வெளியுறவு அமைச்சர்களாக இருந்த ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்கா காலங்களில் இலங்கை அரசுக்கு அந்நாட்டு இராணுவ பணிகளுக்கு இந்திய அரசு உதவியது ஞாபகம் இருக்கிறதா? அதற்கு ஆட்சேபம் தெரிவித்து அதைத் தடுத்திருக்கலாமே. 2009 ஜனவரியிலிருந்து நாங்கள் தி.மு.க. அரசை நம்பவில்லை, ஐ.நா.வை நம்புகிறோம் என்று சொன்னவர்கள், இப்போது தலைவர் கலைஞர் அனுப்பிய தூதுக் குழுவைப் பற்றி பேசும்பொழுது மட்டும் மகாபாரத காந்தாரி பாத்திரத்தைப் போன்று நர்த்தனமாடுவது எந்த வகையான அரசியல் கண்ணியம். முள் வேலி முகாமில் அடைக்கப்பட்ட ஈழத் தமிழரை காப்பதைவிட்டு விட்டு தி.மு.க. அரசின் மீது குறை சொல்வதற்காக தினமும் ஒரு அறிக்கையும், ஏதாவது கூட்டங்களில் முழங்குவதும் இவர்களது வாடிக்கை. இவர்களுக்கு நடுநிலையானப் பார்வையும் இல்லை; சிந்திக்கும் திராகலைஞரும் ஈழப் பிரச்சினையும்!

 வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

ஈழப் பிரச்சினையில் கலைஞரும், தி.மு.க.வும் 1956இல் இருந்து ஆற்றிய பணிகளை நீண்ட பட்டியலிடலாம். இன்றைக்கு பொத்தாம் பொதுவாக தேவையற்ற விமர்சனங்களை தி.மு.க. மீது வைப்பவர்களுக்கு ஒரு சில செய்திகளை சொல்ல வேண்டியது வரலாற்றுக் கடமை.

முதன் முதலாக சிதம்பரத்தில், அண்ணா காலத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக் குழுவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தீர்மானத்தை முன் மொழிந்ததே கலைஞர் அவர்கள்தான். பூவாலூர் பொன்னம்பலனார் அதனை வழி மொழிந்தார். ஈழத்தில் உள்ள தமிழ் மக்கள் நிம்மதியாக இருக்க நடத்திய அறப் போராட்டங்கள், சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்கள், இரு முறை கலைஞர் தன்னுடைய ஆட்சியை இழந்த நிகழ்வுகள், தி.மு.க. சார்பில் தமிழ்மக்களிடமிருந்து சிறுக சிறுக சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள் என பல செயல்பாடுகளை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. தந்தை செல்வாவும், அமிர்தலிங்கம் அவர்களும் 50 ஆண்டுகளுக்கு முன்னால் ஈழத் தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் கலைஞரை சந்தித்த போதெல்லாம் தன்னுடைய ஆதரவை கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார்.

அண்ணா நூற்றாண்டு விழா 26.9.2009 அன்று காஞ்சியில் நடைபெற்றபோது, அவ்விழாவில் ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை கலைஞர் அவர்கள் பிரகடனப்படுத்தியது என்பது ஒரு முக்கிய நடவடிக்கை ஆகும். தமிழகத்தில் உள்ள 75,000க்கும் மேலான ஈழ அகதிகளுக்கு சிறப்பு முகாமை 1991இல் கலைஞர் ஏற்படுத்தினார். 

1960யிலிருந்து இப்பிரச்சினை குறித்து பொதுக் கூட்டங்களில் மக்கள் மத்தியில் பிரச்சாரத்திலும், அவ்வப்பொழுது ஈழத் தமிழர்கள் ஆதரவு கூட்டங்களிலும் அவர்களுக்கு கலைஞர் ஆதரவு அளித்ததையும் யாரும் மறுக்க முடியாது. தொடர்ந்து கழகம் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினைகளில் அக்கறை எடுத்துக் கொண்டதற்கு வரலாறு சாட்சியாக இன்றைக்கு இருக்கின்றது.

1983இல் இலங்கையில் கோரமாக துயரங்கள் நடைபெற்றபொழுது தலைவர் கலைஞர் அவர்களும், பேராசிரியர் அவர்களும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துச்சமாக ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தூக்கி எறிந்தனர். 

வெளிக்கடையில் சிறையிலடைக்கப்பட்ட குட்டிமணி விவகாரத்தில் கலைஞர் அவர்களை தேவையில்லாது சம்பந்தப்படுத்தி பேசுகிறார்கள். ஆனால் அதில் என்ன உண்மை என்றால்; வெளிக்கடைச் சிறையில் இருந்து குட்டிமணி, தனது கைதுக்கும், கலைஞருக்கும் எந்த சம்பந்தமுமில்லை என குட்டிமணியே எழுதிய ஒரு கடிதத்தை அவரது வழக்கறிஞர் கரிகாலன் நெல்லையில் இருந்த வைகோவிற்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை கலைஞரிடம் நேரில் கொடுத்தார் வைகோ.

குட்டிமணி கைதுக்கு கலைஞர் காரணமில்லை என்று பலமுறை மேடைகளில் பேசியுள்ளார் வைகோ. வெளிக்கடைச் சிறையில் குட்டிமணி, ஜெகன் இருவரையும் தூக்கிலிடக் கூடாது என்ற கருணை மனுவில் முதல் கையெழுத்துப் போட்டவர் கலைஞர்தான். அப்போது அறிவாலயம் கிடையாது. 28 ஆண்டுகளுக்கு முன் அரசினர் தோட்ட வளாகத்தில் இருந்த கழக சட்டமன்ற அலுவலகத்தில், பழ.நெடுமாறன் சொல்லி,  தி.சு.கிள்ளிவளவனும், நானும் சென்று கையெழுத்து வாங்கினோம்.

1983இல் இராமநாதபுரத்தில் கழக மாவட்ட மாநாடு ஈழ விடுதலை மாநாடாக இரண்டு நாட்கள் மாவட்டச் செயலாளர் சத்தியேந்திரன் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. அப்போது இலங்கையில் தமிழர்கள் கொடுமையாக கொல்லப்படுகின்ற நேரம். அம்மாநாட்டில் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு குரல்கள் அருகிலிருக்கும் இலங்கை நோக்கி ஒலித்தது.

ஐ.நா.மன்றத்தை ஈழத் தமிழர் பிரச்சினையில் தலையிட கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி இலட்சக்கணக்கில் கையொப்பம் பெற்று தி.மு.க. அனுப்பியது. அம்மாதிரி தந்திகள், கடிதங்கள் மத்திய அரசுக்கு பல்வேறு கட்டங்களில் இப்பிரச்சினையில் கழகத் தோழர்கள் அனுப்பினர்.

நியூயார்க்கில் டாக்டர் பஞ்சாட்சரம் நடத்திய முதல் ஈழ விடுதலை மாநாட்டிற்கு, தி.மு.க. பிரதியாக அன்றைய வை.கோபால்சாமியை கலைஞர் அனுப்பினார். அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து இன்றைய துணை முதல்வர் தளபதி ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்து வழியனுப்பியது இன்றும் என் மனக்கண்ணில் உள்ளது.

தலைவர் கலைஞர் அவர்கள் ‘டெசோ’ என்ற தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை உருவாக்கினார். அதில் கி.வீரமணி, பழ.நெடுமாறன், பார்வர்டு பிளாக் தலைவர் மறைந்த அய்யன் அம்பலம் ஆகியோரை உறுப்பினர்களாக்கி, அந்த அமைப்பு வேலூர், திருச்சி, கோவை, தூத்துக்குடி போன்ற இடங்களில் பெரிய மக்கள் திரள் பேரணி நடத்தியது. இறுதியாக 4.5.1980 அன்று ஈழத் தமிழர் நலன் காக்க அகில இந்திய டெசோ மாநாட்டை மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் திறந்தவெளி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் வாஜ்பாய், என்.டி.ராமராவ், எச்.என்.பகுகுணா, ஜஸ்வந்த் சிங், ராமுவாலியா, உபேந்திரா, ராச்சய்யா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணியன் சுவாமி போன்றோர் கலந்து கொண்டனர். அத்துடன், ஈழத் தமிழர் தலைவர்கள் அமிர்தலிங்கம், சிவ.சிதம்பரம், சம்பந்தன், சந்திரஹாசன், ஈழவேந்தன் போன்றவர்களோடு, எல்.டி.டி.ஈ., டெலோ, பிளாட், ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈராஸ் போன்ற போராளி இயக்கங்களும் கலந்து கொண்ட கலந்தாய்வுக் கூட்டம் பாண்டியன் ஓட்டலில் நடைபெற்றது. அதில் தலைவர் கலைஞர், என்.டி.ஆர். ஆகியோர் போராளிக் குழுக்களுக்கிடையே சகோதர,  பாச ஒற்றுமையை பாதுகாக்க கோரிக்கை வைத்தனர்.

டெசோ அமைப்பு யாரால் சீர்குலைந்தது? அன்றைக்கு தி.மு.க.வை விட்டுவிட்டு இலங்கைக்கு அத்தியாவசியப் பண்டங்கள் செல்வதை, தூத்துக்குடி துறைமுகத்தில் தடுக்கும் போராட்டம் என்று பழ.நெடுமாறனும், கி.வீரமணியும் அறிவித்து பிரச்சாரப் பயணம் மேற்கொண்டது கலைஞருக்கே தெரியாது. அதுகுறித்து பேச வைகோவும், நானும் வீரமணி வீட்டிற்கு 1986 இறுதியில் சென்றோம். நெடுமாறன் அவர்களையும் சந்தித்தோம். ஆனால் அங்கு ஒற்றுமை நிலை ஏற்பட வாய்ப்பு இல்லாததால் டெசோ அமைப்பு உடைந்தது. அந்த டெசோ அமைப்பு இருந்திருந்தால் இவ்வளவு விபரீதங்கள் ஏற்பட்டிருக்காது. இதற்கு காரணம் என்ன என்று அவரவர்கள் மனசாட்சிக்கே தெரியும்.

ஈழத் தமிழர் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹசாசன், சத்தியேந்திரா போன்றவர்கள் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் நாடு கடத்தியபோது, 24 மணி நேரத்தில் அதைக் கண்டித்து மாபெரும் பேரணியை சென்னையில் தலைவர் கலைஞர் அறிவித்தார். அந்தப் பேரணியின் எழுச்சிக் கண்டு நாடு கடத்தப்பட்டவர்கள் திரும்பவும் தமிழகம் அழைக்கப்பட்டனர்.

சென்னை மத்தியச் சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், அ.தி.மு.க. ஆட்சியில் அடைக்கப்பட்ட கிட்டுவை வைகோ, என்.வி.என். சோமு, நானும் சந்திக்க சென்றது இன்றும் நினைவில் உள்ளது.

இலங்கைக்குச் சென்ற அமைதிப் படை சென்னைக்குத் திரும்பும்போது அங்குள்ள தமிழர்கள் பட்டத் துயரங்களுக்காக தலைவர் கலைஞர் அவர்கள் வரவேற்க செல்லவில்லை என்பதும், 1989இல் தான் முதல்வர் ஆனவுடன் சென்னை துறைமுகக் கழக விருந்தினர் விடுதியில் இன்றைக்கும் முரசொலி மாறன் அவர்கள் உடன் இருக்க, ஈழத் தமிழ் போராளிகளை அழைத்து அவர்களது கோரிக்கைகளை செவி சாய்த்து கேட்டு, அன்றைய பிரதமர் இராஜிவ் காந்தியிடம் இதுகுறித்து விவாதிக்க தலைவர் கலைஞர் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை யாரும் மறைக்க முடியாது. இப்படி தலைவர் கலைஞர் ஈழத் தமிழர்களுக்காக எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள், நிகழ்வுகள் பெரிய நீண்ட பட்டியலாகும்.

16.10.2008 அன்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் இப்பிரச்சினைக் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானத்தைக் கொண்டு மத்திய அரசை வலியுறுத்தியதும், 24.10.2008 அன்று மனித சங்கிலியும், 4.12.2008 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அனைத்துக் கட்சியினர் எடுத்துச் சொல்லி, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டியது எல்லாம் யாரும் மறந்துவிட முடியாது. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து தனது ஆட்சியையே 1991இல் இழந்தார் தலைவர் கலைஞர் அவர்கள். திடீரென்று இன்று ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் ஜெயலலிதாவால் பொடாவில் அடைக்கப்பட்ட தலைவர்கள் விடுதலை பெற தலைவர் கலைஞர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், போராட்டங்கள் எண்ணிலடங்கா. இன்றைக்கு அந்தத் தலைவர்கள் அம்மையாரிடம் சேர்ந்து பக்க வாத்தியம் வாசிக்கின்றனர்.

 பல கோடிகணக்கான மதிப்பில் உணவுப் பொருள்களையும், மருந்துகளையும் திரட்டி அல்லல்படும் இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலைவர் கலைஞர் அனுப்பி வைத்தார். 2009இல் நடைபெற்ற முல்லிவாய்க்கால் பிரச்சினையின்போது அண்ணா நினைவிடத்தில் கலைஞர் அவர்கள் நடத்திய உண்ணாவிரத நிகழ்வை எண்ணிப் பார்க்க வேண்டும்.

தலைவர் கலைஞர் அவர்களுடைய சீரிய முயற்சியால் ஐந்து நாட்கள் தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டது. 

ஈழப் பிரச்சினை கொடூரமாக இருந்தபொழுது எம்.ஜி.ஆர். முதல்வர். அவருக்கு சகல அதிகாரங்களும் இருந்தது. அப்பொழுது கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர். அவரால் இதுபோன்ற போராட்டக் களத்தைத் தான் அன்றைக்கு (80களில்) ஏற்படுத்த முடியுமே தவிர, எம்.ஜி.ஆர். போல ஆட்சி பரிவாரத்தில் செய்தது போல் எப்படி செய்ய முடியும்? எம்.ஜி.ஆர். ஆட்சி கட்டிலில் இருந்ததால் அவருக்கு வாய்ப்புகள் இருந்தது. அதுமட்டுமல்லாமல், அன்றைக்கு பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் ஈழப் பிரச்சினைக்கு முழு ஆதரவாக இருந்தார். எனவே, இதில் ஒப்பிட்டுப் பேச முடியாது. ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா ஈழப் பிரச்சினையில் நீலிக் கண்ணீர் வடிக்கின்றார். கடந்த 16.4.2002 அன்று சட்டமன்றத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது எனவும், பிரபாகரனை பிடிக்க இந்திய இராணுவத்தை அனுப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினார். இதையெல்லாம் மறைத்து விட்டு இன்றைக்கு அவரோடு தோள் கொடுக்கும் தலைவர்கள் கஞைரை குறை கூறுவது எப்படி சரியான செயலாகும்?

மறைந்த தமிழ்ச் செல்வனுக்கு இரங்கற்பா எழுதியதைகூட பொறுக்க முடியாத ஜெயலலிதா எப்படி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார். ராஜிவ் படுகலைக்கு பின்பு ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்த பொழுதுகூட கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் விரும்பும் தீர்வு அங்கு ஏற்பட வேண்டும் என தெளிவான நடவடிக்கையை மேற்கொண்டார். இப்படி கடந்த கால நிகழ்வுகள் பலவற்றை எல்லாம் மறந்துவிட்டு பொத்தாம் பொதுவாக ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. சரியாக நடந்து கொள்ளவில்லையென்று சொல்வது விதண்டாவாத நடவடிக்கையே ஆகும். அவர்களுக்கு நிலவரங்களை எவ்வளவுதான் சொன்னாலும் காமாலைக் கண்ணுக்கு தெரியாது. ஆனால், மக்களுக்கு எல்லாம் தெரியும். இதை தான் கலைஞர் ‘மௌன வலி’ என குறிப்பிட்டார். வேறு என்ன சொல்ல?

ணியும் கிடையாது. இதையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டு தலைவர் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறார் என்பதை வரலாறு நிச்சயம் சொல்லும்.

இவ்வாறு 50 ஆண்டுகால தலைவர் கலைஞர் அவர்களின் தொடர் நடவடிக்கைகளை பார்த்தால், இதைவிட யார், வேறு என்ன செய்துள்ளார்கள் என்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.